ஆட்டோக்களுக்கு மீட்டர்… குறைந்தபட்ச கட்டணம் நிர்ணயம்: மக்களுக்கு கிடைக்குமா நிம்மதி?
சென்னை: மதுரையில் இருந்து சென்னைக்கு ரயிலில் செல்ல ஆகும் செலவை விட சென்னையில் நகரத்திற்கும் ஆட்டோவில் பயணம் செய்ய அதிக செலவாகும். அந்த அளவிற்கு அடித்து பிடித்து கறந்து விடுவார்கள்.
கேட்டால் வாரா வாராம் பெட்ரோல், டீசல் விலை ஏறுகிறது நாங்க என்ன செய்வது என்பதுதான் ஆட்டோ டிரைவர்களின் வாதம். ஆட்டோக்களுக்கு கண்டிப்பாக கட்டணம் நிர்ணயம் செய்யவேண்டும் என்று உச்சநீதிமன்றமே உத்தவிட்டு இது தொடர்பாக பதிலளிக்காத தமிழக அரசுக்கு 10000 ரூபாய் அபராதமும் விதித்தது.
இதனையடுத்து ஆட்டோவுக்கு புதிய கட்டணம் நிர்ணயிப்பது தொடர்பான முத்தரப்பு பேச்சுவார்த்தை தலைமை செயலகத்தில் சனிக்கிழயன்று நடந்தது. இதில், ஆட்டோக்களுக்கு குறைந்தபட்ச கட்டணம் ரூ.30 எனவும், அடுத்தடுத்து கி.மீ 15 நிர்ணயிக்க வேண்டுமென தொழிற்சங்கங்கள் கோரிக்கை விடுத்துள்ளன. விரைவில் நிர்ணயித்து அறிவிக்கப்படும் என்று அமைச்சர் உறுதியளித்துள்ளார்.

2,45, 000 ஆட்டோக்கள்
தமிழகத்தில் சுமார்2,45,000 ஆட்டோக்களும், சென்னையில் மட்டும் 77,000 ஆட்டோக்களும் ஓடுகின்றன. 1996க்கு பின் 2007 ஜனவரியில் தான் கட்டணம் மாற்றியமைக்கப்பட்டது.

உச்சநீதிமன்றம் கெடு
கட்டணம் நிர்ணயிப்பதில் தமிழக அரசின் மெத்தன போக்கை உச்ச நீதிமன்றம் கண்டனம் தெரிவித்து, 10,000 அபராதமும் விதித்தது. ஒரு மாதத்தில் புதிய கட்டணத்தை நிர்ணயிக்க வேண்டுமென உத்தரவிட்டுள்ளது. இந்த காலகெடு வரும் 26ம் தேதியுடன் முடிவடைகிறது.

குறைந்தபட்சம் ரூ.20
தமிழக அரசு சார்பில் குறைந்தபட்ச ஆட்டோ கட்டணம் 20 (2 கி.மீ), அடுத்த தடுத்து கி.மீட்டருக்கு 10 நிர்ணயிக்க உள்ளதாக உச்ச நீதிமன்றத்தில் கூறப்பட்டு இருந்தது.

மானிய விலையில் டிஜிட்டல் மீட்டர்
குறைந்தபட்ச கட்டணம் 30 என உயர்த்த வேண்டும். ஒவ்வொரு கி.மீக்கு 15 என நிர்ணயிக்க வேண்டும். டிஜிட்டல் மீட்டர் பொருத்த வேண்டுமென்றால், அரசே இலவசமாக அல்லது மானிய விலையில் வழங்க வேண்டும் என்று ஆட்டோ தொழிற்சங்கங்கள் சார்பில் தமிழக அரசிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது.

முத்தரப்பு பேச்சுவார்த்தை
தலைமை செயலகத்தில் போக்குவரத்து துறை அமைச்சர் செந்தில்பாலாஜி தலைமையில் சனிக்கிழமை மாலை சுமார் 4.30 மணி அளவில் முத்தரப்பு பேச்சு வார்த்தை தொடங்கி இரவு 7.30 வரை நடந்தது. மூன்று சுற்றாக பேச்சு வார்த்தை நடந்தது. முதல் கட்டமாக நுகர்வோர் அமைப்புகளுடனும், 2வது கட்டமாக தொழிற்சங்கங்களுடனும், 3வது கட்டமாக 2 தரப்பினருடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது.

மீட்டரை கண்காணிக்க வேண்டும்
‘‘குறைந்த பட்ச கட்டணமாக 25 முதல் 30, அடுத்தடுத்த கி.மீக்கு ரூ.11 நிர்ணயிக்க கோரியுள்ளோம். மேலும், ஆட்டோக்களில் மீட்டர்கள் சரியாக இயக்கப்படுகிறதா என்பதையும் தொடர்ந்து கண்காணிக்க வேண்டும்'' என்று நுகர்வோர் அமைப்பினர் கூறியுள்ளனர்.

காஸ் மூலம் ஆட்டோ
குறைந்தபட்ச கட்டணம் ரூ.30 என உயர்த்த வேண்டும். ஒவ்வொரு கி.மீ 15 என கட்டணம் நிர்ணயிக்க வேண்டும். இலவசமாக அல்லது மானிய விலையில் டிஜிட்டல் மீட்டர்களை வழங்க வேண்டும் என்று கோரினோம். மற்ற மாநிலங்களில் வசூலிக்கும் ஆட்டோ கட்டணத்தை ஒப்பிட்டு அரசு தரப்பில் பேசியபோது, அனைத்து ஆட்டோக்களையும் காஸ் மூலம் இயக்க ஏற்பாடு செய்ய வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

முதல்வர் அறிவிப்பு
முத்தரப்பு பேச்சுவார்த்தை நடந்து முடிந்துள்ள நிலையில், சென்னைக்கு முதல்வர் வந்த பிறகே, புதிய ஆட்டோ கட்டணத்தை அறிவிப்பார் என்று கூறப்படுகிறது. இனி ஆட்டோ பயணம் சென்னை வாசிகளுக்கு சுகமான பயணமாக அமையும் என்பதில் சந்தேகமில்லை.
-
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
தங்கக் காசு மூலம் டிரம்ப் வேலையை காட்டிட்டாரு! அமெரிக்காவில் தங்க நாணயம் தந்த அதிர்ச்சி -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
தேமுதிகவுக்கு எத்தனை தொகுதிகள்? எங்கெங்கு போட்டியிடுகிறார்கள்? உத்தேச பட்டியல் இதுதானா? -
பாஜகவுக்கு 27 சீட்.. என்.டி.ஏ கூட்டணியில் தொகுதி பங்கீட்டை இறுதி செய்து அறிவித்தார் எடப்பாடி! -
பவரை காட்டுவோம்! மொத்த உலக நாடுகளையும் பீதியில் ஆழ்த்திய டிரம்ப் சொன்ன வார்த்தை! பெருசா நடக்க போகுது -
சர்ருன்னு ஏறிய பாஜக சீட் கணக்கு.. கடந்த தேர்தல்களில் பாஜக போட்டியிட்ட தொகுதிகள் எத்தனை?












Click it and Unblock the Notifications