3 மாதம் 2 குழந்தைகளோடு கடலில் தத்தளித்த தம்பதி மீட்பு

நியூயார்க்: அமெரிக்காவில் இருந்து படகு மூலம் வெளியேறி தீவு நாடான கிரிபாட்டிக்கு 2 குழந்தைகளுடன் சென்ற தம்பதி கடலில் தொலைந்துவிட்டனர். இந்நிலையில் 3 மாதங்கள் கழித்து அவர்கள் மீட்கப்பட்டுள்ளனர்.
அமெரிக்காவின் அரிசோனா மாகாணத்தைச் சேர்ந்தவர் ஷான் காஸ்டன்க்வேய். அவருடைய மனைவி ஹான்னா. அவர்களுக்கு அர்தித் என்ற 3 வயது மகளும், ரஹப் என்ற குழந்தையும் உள்ளது. மத நம்பிக்கை மிக்க அந்த குடும்பத்திற்கு அமெரிக்காவில் ஓரினச் சேர்க்கையாளர்களை ஏற்றுக் கொள்வது, கருக்கலைப்பை ஏற்றுக்கொள்வது போன்றவை பிடிக்கவில்லை.
இதனால் அவர்கள் அமெரிக்காவில் இருந்து வெளியேறி அங்கிருந்து 3,300 மைல் தொலைவில் உள்ள சிறிய தீவு நாடான கிரிபாட்டிக்கு செல்ல தீர்மானித்தனர். அதன்படி அவர்கள் கடந்த மே மாதம் சான் டீகோவில் இருந்து சிறிய படகில் கிரிபாட்டிக்கு கிளம்பினர். அவர்கள் கிளம்பிய நேரத்தில் புயல் அடித்து அவர்களின் படகு படாதபாடுபட்டது.
படகை மேலும் செலுத்த முடியாமல் அவர்கள் மாதக் கணக்கில் கடலிலேயே தவித்தனர். இந்நிலையில் 3 மாதங்கள் கழித்து அந்த வழியாக சென்ற விமானம் ஒன்று அவர்களை காப்பாற்றி அருகில் உள்ள சிலி நாட்டில் கடந்த வெள்ளிக்கிழமை இறக்கிவிட்டது. அவர்கள் நாடு திரும்ப அமெரிக்க அரசு விமான டிக்கெட் எடுத்துக் கொடுத்துள்ளது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தலை எதிர்கொள்ள திமுகவின் இரட்டை வியூகம்.. இள ரத்தத்திற்கு முக்கியத்துவம்! -
டாஸ்மாக்கில் ரூ.3,600 கோடி ஊழல்.. லிஸ்ட் எடுத்த தவெக.. அமைச்சர் விக்னேஷ் திடுக் தகவல் -
96,000 வாக்குகள் வித்தியாசத்தில்.. தவெக வேட்பாளரை ஜெயிக்க வைத்த தொகுதிக்கு இந்த நிலைமையா? -
ரூ.15 லட்சம் கோடி பஸ்பம் ஆகும்? சரிகிறது இந்தியாவின் தங்க’ சாம்ராஜ்யம்.. நாட்டையே உலுக்கும் சம்பவம் -
அதிகாலையே கணக்கில் வரவு வைக்கப்பட்ட ரூ.3000.. வந்தது மே மாதம் பேமெண்ட்.. அரசின் அசத்தல் மூவ்! -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
சென்னை சூட்கேஸில் தலை இல்லாத சடலம்... இப்படி ஒரு பெண்ணா? பார்கோடு தந்த மரண துப்பு.. அலறிய பெரம்பூர் -
சொத்துகளை மறைக்கும் சென்னை மேயர் பிரியா.. துணை மேயர் உள்பட 75% கவுன்சிலர்கள் 4 ஆண்டுகளாக ‘டிமிக்கி' -
அடித்து ஆடும் விஜய்.. வருகிறது ராமநாதபுரம் புதிய விமான நிலையம்.. பொருளாதார புரட்சிக்கு அடித்தளம்! -
ஸ்டாலின் காங்கிரஸுக்கு தந்த பவர்புல் ஷாக்! பாஜகவும் இல்லை.. அப்ப தேசிய அரசியலில் திமுகவின் ரூட் என்ன -
அதெப்படி திமிங்கலம்.. தமிழ்நாட்டிற்கு வரவேண்டிய ஒப்பந்தம் வரிசையா.. கரெக்ட்டா ஆந்திராவுக்கு போகுது! -
டெல்லியில் இந்தியா கூட்டணி ஆலோசனை.. திமுக, ஆம் ஆத்மி புறக்கணிப்பு.. வைகோ, திருமாவளவன் பங்கேற்பு












Click it and Unblock the Notifications