பொய் வழக்கில் என்னை கைது செய்ய தமிழக காவல்துறை துடிக்கின்றது: அன்புமணி ராமதாஸ் குற்றச்சாட்டு

Subscribe to Oneindia Tamil

Anbumani Ramadoss
சென்னை: உளுந்தூர்பேட்டை சுங்கச்சாவடி சம்பவத்தில் பொய் வழக்கில் தன்னை கைது செய்ய காவல்துறை துடிக்கின்றது என பாமக இளைஞர் அணி தலைவர் அன்புமணி ராமதாஸ் குற்றம் சாட்டியுள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,

விழுப்புரம் மாவட்டம் உளுந்தூர்பேட்டை சுங்கச்சாவடியில் கடந்த சில நாட்களுக்கு முன்பு, சிறு மோதல் நடைபெற்றுள்ளது. சுங்கச்சாவடியில் நடந்த நிகழ்வு தவிர்க்கப்பட்டிருக்க வேண்டும். இதற்காக எனது வருத்தத்தை தெரிவித்துக் கொள்கிறேன்.

இது தொடர்பான வழக்கில் என்னையும், தமிழக காவல்துறை சேர்த்திருக்கிறது. என்னை பழிவாங்க வேண்டும் என்ற எண்ணத்தில் பொய் வழக்கு போடப்பட்டுள்ளது.இது வன்மையாக கண்டிக்கத்தக்கதாகும். இதில், சம்பந்தப்பட்ட 3 பேரை காவல்துறையிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுத்தேன். இந்த உண்மைகள் அனைத்தும் காவல்துறையினருக்கும் நன்றாக தெரியும்.

ஆனால், இதையெல்லாம் நான் தான் தூண்டினேன் என்று கூறி இந்த வழக்கில் என்னையும் சேர்த்து கைது செய்ய காவல்துறை துடிக்கிறது. பாமகவினர் எவரும் இது போன்ற செயல்களில் ஈடுபடக் கூடாது.

உளுந்தூர்பேட்டை நிகழ்வுக்காக மீண்டும் ஒரு முறை எனது வருத்தத்தை தெரிவித்துக் கொள்கிறேன் என்று அவர் அதில் தெரிவித்துள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+