பாகிஸ்தான் தாக்குதலுக்குக் கண்டனம் தெரிவித்து லோக்சபாவில் தீர்மானம்!
டெல்லி: ஜம்மு காஷ்மீர் எல்லையில் பாகிஸ்தான் ராணுவம் நடத்திய தாக்குதலுக்கு நாடாளுமன்ற லோக்சபாவில் கண்டனம் தெரிவித்து இன்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
ஜம்மு காஷ்மீர் எல்லையில் பூஞ்ச் பகுதியில் பாகிஸ்தான் ராணுவம் நடத்திய தாக்குதலில் 5 இந்திய வீரர்கள் கொல்லப்பட்டனர். இந்த சம்பவத்தால் இரு நாடுகளிடையேயான உறவில் விரிசல் ஏற்பட்டிருக்கிறது.
இந்நிலையில் பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் இந்தியாவுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருந்தது. அதில் இந்தியாதான் ஆத்திரமூட்டும் நடவடிக்கைகளில் ஈடுபடுவதாக பாகிஸ்தான் குற்றம்சாட்டியிருந்தது.
இதைத் தொடர்ந்து இன்று நாடாளுமன்ற லோக்சபாவில் பாகிஸ்தானுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
அத்தீர்மானத்தில், பாகிஸ்தானின் தேசிய நாடாளுமன்றமும், பஞ்சாப் மாகாண சபையும் நிறைவேற்றிய தீர்மானங்களை லோக்சபா நிராகரிக்கிறது. இந்திய ராணுவம் மற்றும் இந்திய மக்கள் மீது ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை அந்த தீர்மானம் தெரிவிக்கிறது. ஆகஸ்ட் 6-ந் தேதியன்று எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதியில் தாக்குதல் நடத்தியது பாகிஸ்தான் ராணுவமே.
பாகிஸ்தானுக்கோ பாகிஸ்தானியர்களுக்கோ இந்தியா அச்சுறுத்தல் உள்ள நாடாக இல்லை. அதே நேரத்தில் பாகிஸ்தானால் வளர்க்கப்படும் பயங்கரவாத அமைப்புகள் இந்த பிராந்தியத்துக்கே மிகப் பெரிய அச்சுறுத்தலாக இருக்கிறது.
பாகிஸ்தான் ராணுவத்தின் நடவடிக்கைகளுக்கு லோக்சபா கண்டனம் தெரிவித்துக் கொள்கிறது. எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதியில் உயிர் நீத்த இந்திய வீரர்களுக்கு இந்த சபை வீரவணக்கத்தை தெரிவித்துக் கொள்கிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications