பிரதமர் ஆசையில் எல்லை தாண்டும் மோடி: காங்கிரஸ் கண்டனம்
டெல்லி: பிரதமராகும் ஆசையில் குஜராத் முதல்வர் நரேந்திர மோடி எல்லை தாண்டி பேசியுள்ளதாக காங்கிரஸ் தலைவர் திக்விஜய் சிங் கண்டனம் தெரிவித்துள்ளார்.
டெல்லி செங்கோட்டையில் பிரதமர் மன்மோகன்சிங் தேசியக் கொடியேற்றி வைத்து நாட்டு மக்களுக்கு சுதந்திர தின உரையாற்றினார். பிரதமரின் சுதந்திர தின உரையில் பாகிஸ்தானுக்கு எதிரான கடும் நிலைப்பாடு இல்லை என்று கூறியிருந்த குஜராத் முதல்வர் நரேந்திர மோடி, நாட்டின் முன் உள்ள பிரச்சனைகள் தொடர்பாக விவாதிக்க தயாரா என்று மன்மோகன்சிங்குக்கு சவால் விடுத்திருந்தார்.
இதற்கு காங்கிரஸ் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. அக்கட்சியின் மூத்த தலைவரான திக்விஜய் சிங், பிரதமராகும் ஆசையில் நரேந்திர மோடி எல்லை தாண்டிப் பேசிவருகிறார். அதனாலேயே பிரதமர் மன்மோகன்சிங்கை அவர் விவாதம் நடத்த அழைத்திருக்கிறார் என்றார்
இதேபோல் மத்திய தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் கபில் சிபலும் மோடிக்கு எதிர்ப்புத் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறுகையில், மோடியின் ஒவ்வொரு உரையிலும் தவறான தகவல்கள் மற்றும் புள்ளிவிவரங்கள் நிறைந்திருக்கின்றன என்றார்.












Click it and Unblock the Notifications