தீவிரவாதிகள் தாக்குதலால் நீர்மூழ்கிக் கப்பல் வெடித்திருக்கலாம்..: விசாரிக்க கருணாநிதி கோரிக்கை!
சென்னை: மும்பை ஐ.என்.எஸ். சிந்துரக்சக் நீர்மூழ்கிக் கப்பல் தீவிரவாதிகளின் தாக்குதலால் வெடித்திருக்கக் கூடும் என்பதால் அதுபற்றியும் விசாரிக்க வேண்டும் என்று திமுக தலைவர் கருணாநிதி கோரிக்கை விடுத்திருக்கிறார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஐ.என்.எஸ். சிந்துரக்சக் என்ற நீர்மூழ்கிக் கப்பல் மும்பைத் துறைமுகத்தில் புதன்கிழமை நள்ளிரவில் வெடித்து சிதறியுள்ளது. விபத்துக்கான காரணம் தெரியவில்லை. நீர்மூழ்கிக் கப்பலில் இருந்த 18 கடற்படை வீரர்கள் இறந்திருக்கக் கூடும் என ராணுவ அமைச்சர் ஏ.கே.அந்தோனி தெரிவித்துள்ளார்.

அலட்சியத்துக்கு யார் காரணம்?
அந்தச் செய்தி உண்மையானால், இந்த அவலத்துக்கும் அலட்சியத்துக்கும் யார் காரணம் என்பதையும், எச்சரிக்கை செய்யும் உபகரணங்கள் செயலற்றுப் போனது ஏன் என்பதையும் பொறுப்பில் உள்ளவர்கள் ஆராய வேண்டும்.

இந்திய கடற்படைக்கு பெரும் பின்னடைவு
மேலும் அது தொடர்பாக முறையான நடவடிக்கை எடுக்கவும் முன்வர வேண்டும். இந்த விபத்து இந்தியக் கடற்படைக்கு மிகப் பெரிய பின்னடைவாகும். நீர் மூழ்கிக் கப்பலில் அணுசக்தி மூலம் மின் உற்பத்தி தயாரிப்பு வெற்றிகரமாக சில நாள்களுக்கு முன்புதான் நடத்தப்பட்டது. அந்தப் பெருமைக்குரிய சம்பவங்கள் நடந்த சில நாள்களிலேயே இந்தத் துயரச் சம்பவமும் நடைபெற்றுள்ளது.

அலட்சியம் இனி கூடாது
இந்தியக் கடற்படை வரலாற்றில் போரில்லாத காலத்தில் நடைபெற்ற மிக மோசமான விபத்தாகும் இது. இந்திய ராணுவத்தின் பாதுகாப்பில் மட்டுமல்லாமல், இந்தியாவின் பாதுகாப்பிலும் இந்த அலட்சியம் இனியும் ஏற்படக்கூடாது.

நாசவேலையா? தீவிரவாதிகளின் தாக்குதலா?
நீர் மூழ்கிக் கப்பல் நெருப்பில் வெடித்துச் சிதறியதற்கு நாச வேலை காரணமா என்பதையும் விசாரிக்கப்பட வேண்டும். தீவிரவாதிகளின் தாக்குதல் காரணமாகவும் இந்த சம்பவம் நடைபெற்றிருக்கக் கூடும். எனவே அது குறித்தும் விசாரிக்கப்பட வேண்டும். விபத்தில் இறந்த 18 வீரர்களின் குடும்பங்களுக்கும் என் ஆழ்ந்த இரங்கல் என்று கூறியுள்ளார்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications