முஸ்லீம்களிடையே வேலையில்லாத் திண்டாட்டம் குறைகிறது - சர்வே
டெல்லி: முஸ்லீம் சமுதாயத்தினரிடையே வேலையில்லாத் திண்டாட்டம் குறைந்து வருவதாக புள்ளிவிவரத் தகவல் ஒன்று தெரிவிக்கிறது.
ஒட்டுமொத்த பொருளாதார வளர்ச்சிக்கான திட்டமிடல் பணிகளுக்கு ஊக்கம் தருவதாக இது அமைந்துள்ளதாக கருதப்படுகிறது.
கடந்த 7 ஆண்டுகளில் வேலையில்லாத் திண்டாட்டம் முஸ்லீம் சமுதாயத்தினர் மத்தியில் வெகுவாக குறைந்துள்ளது மகிழ்ச்சி அளிக்கும் விஷயமாகும்.

2004-05ல்
2005-05ம் ஆண்டு வேலையில்லாத் திண்டாட்ட அளவு 2.3 சதவீதமாக இருந்தது.

2009-10ல் பாதியாக குறைந்தது
அதுவே 2009-10ம் ஆண்டு வாக்கில் 1.9 சதவீதமாக குறைந்தது. இது ஊரகப் பகுதிகளுக்கான கணக்கு.

நகர்ப்புறங்களில் 3.2 சதவீதம்
நகர்ப்புறங்களைப் பொறுத்தவரை 4.1 சதவீதத்திலிருந்து 3.2 சதவீதமாக இது குறைந்துள்ளது.

ஒருங்கிணைந்த வேலைவாய்ப்பில் மந்தம்தான்
அதேசமயம், பிற மதத்தவருடன் ஒப்பிடுகையில் ஒருங்கிணைந்த பணிகளில் முஸ்லீம் சமுதாயத்தினர் சற்று பின்தங்கியே உள்ளனர். இது நகர்ப்புறமாக இருந்தாலும் சரி, ஊரகமாக இருந்தாலும் சரி ஒரே நிலைமைதான் காணப்படுகிறது.

இந்துக்களின் வேலைவாய்ப்பு ஸ்திரம்
இந்துக்களைப் பொறுத்தவட்டில் அவர்களின் வேலைவாய்ப்பு விகிதமானது ஊரகப் பகுதிகளில் 1.5 சதவீதம் உயர்ந்துள்ளது. அதேசமயம் நகர்ப்புறங்களில் கடந்த ஐந்து ஆண்டுகளில் 4.4 என்றஅளவிலிருந்து 3.4 சதவீதமாக அது குறைந்துள்ளது.

தேசிய ஆய்வுக் கழக புள்ளிவிவரம்
இதுதொடர்பான புள்ளி விவரத்தை தேசிய ஆய்வுக் கழக மாதிரி வெளியிட்டுள்ளது.

சுய வேலைவாய்ப்பில் முஸ்லீம்கள் முன்னணி
முஸ்லீம்களைப் பொறுத்தவரை நகர்ப்புறங்களில் சுய வேலைவாய்ப்பில் அதிக கவனம் செலுத்துகின்றனர். ஊரகப் பகுதிகளிலும் கூட அவர்கள் அதே நிலையில்தான் உள்ளனர்.

நகரங்களில் கடைசி நிலையில்
பெரு நகரங்கள், சிறு நகரங்களில் முஸ்லீம்கள் வேலைவாய்ப்புப் பட்டியலில் கடைசி இடத்தில் உள்ளனராம். அதாவது நிலையான ஊதியம் மற்றும் மாத ஊதியம் பெறுவோர் மத்தியில் அவர்கள் மிகவும் பின்தங்கிய நிலையில் காணப்படுகின்றனர்.

30.4 சதவீதம் பேருக்கு முறையான வேலை
30.4 சதவீத முஸ்லீம்கள் முறையான வேலைகளில் உள்ளனர். சீக்கியர்கள் 35.7 சதவீதமாகவும், இந்துக்கள் 41 சதவீதமாகவும், கிறிஸ்தவர்கள் 43 சதவீதமாகவும் உள்ளனர்.

சுயவேலைவாய்ப்பில் 46 சதவீத முஸ்லீம்கள்
நகர்ப்புற சுயவேலைவாய்ப்புப் பிரிவில் 46 சதவீதம் பேர் முஸ்லீம்களாக உள்ளனர். இதில் இவர்கள்தான் முன்னணியில் உள்ளனர்.

கிராமங்களிலும் முஸ்லீம்களே முன்னணி
கிராமப்புறங்களிலும் வேலைவாய்ப்பில் 41 சதவீதம் பேர் முஸ்லீம்கள் ஆவர். இதுவே சுய வேலைவாய்ப்பிலும் 46.3 சதவீதத்துடன் முன்னணியில் உள்ளனர்.

விவசாயம்தான் முதலிடம்
முஸ்லீம்கள் தவிர பிற மதத்தவரை ஒட்டுமொத்தமாக கருத்தில் கொண்டால் விவசாயத்தையே பிரதான சுய வேலைவாய்ப்பாக மேற்கொள்கின்றனர்.

சீக்கியர்கள் முதலிடம்
கிராமப் பகுதிகளில் சுய வேலைவாய்ப்பில் சீக்கியர்கள் 48 சதவீதம் பேர் உள்ளனர். இவர்களில் விவசாயத்தில் 36 சதவீதம் பேர் ஈடுபடுகின்றனர். இந்துக்களின் எண்ணிக்கை 33 சதவீதமாகவும், கிறிஸ்தவர்களின் எண்ணிக்கை 30 சதவீதமாகவும் உள்ளது.

விவசாயம் அல்லாத பிரிவில் 25 சதவீத முஸ்லீம்கள்
விவசாயம் சாராத பிற சுய தொழிலில் ஈடுபட்டிருக்கும் முஸ்லீம்களின் எண்ணிக்கை 25 சதவீதமாகும். கிறிஸ்தவர்கள் 14.7 சதவீதம் பேர், இந்துக்கள் 14.5 சதவீத், சீக்கியர்கள் 12.4 சதவீதம் பேராக உள்ளனர்.

மத்திய அரசு வேலைகளில் அதிக முஸ்லீம்கள்
மத்திய அரசு வேலைகளில் முஸ்லீம்கள் அதிக அளவில் சேர்ந்து வருவதாகவும் புள்ளிவிவரம் தெரிவிக்கிறது. கடந்த 6 ஆண்டுகளில் 3 சதவீத அளவு இது அதிகரித்துள்ளது.

ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு வந்த பிறகு
ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு 2004ம் ஆண்டு ஆட்சிக்கு வந்த பிறகு இந்த உயர்வு தொடங்கியது.

2010-11ல் 10.18சதவீதம் உயர்வு
மத்திய அரசு வேலைகளில் சிறுபான்மையினரை சேர்ப்பது என்பது 2010 -11ல் 10.18 சதவீதமாக அதிகரித்தது. இதுவே 2006-07 காலகட்டத்தில் 6.93 சதவீதமாக மட்டுமே இருந்தது.

சிறுபான்மையினரில் முஸ்லீம்களே அதிகம்
சிறுபான்மையினரில் முஸ்லீம்களே அதிக அளவில் வேலைவாய்ப்பைப் பெற்றுள்ளனராம்.

சமுதாயத்திற்குக் கிடைத்த வெற்றி
இதுகுறித்து தேசிய ஆலோசனைக் கவுன்சில் முன்னாள் உறுப்பினர் ஹர்ஷ் மந்தர் கூறுகையில், இது இஸ்லாம் சமுதாயத்திற்குக் கிடைத்த வெற்றியாகும் என்று வர்ணித்துள்ளார்.

ரயில்வே - பாதுகாப்புப் படையில் அதிகரிப்பு
வெறும் மத்திய அரசுப் பணிகள் என்றில்லாமல் ரயில்வே, ஆயுதப் படைகள், பொதுத்துறை நிறுவனங்கள் உள்ளிட்டவற்றிலும் முஸ்லீம்களின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்துள்ளதாம்.

காவல்படையிலும் அதிகரிப்பு
அதேபோல காவல்துறையிலும் முஸ்லீம் சமுதாயத்தினரின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்து வருகிறதாம்.
-
டாஸ்மாக்கில் ரூ.3,600 கோடி ஊழல்.. லிஸ்ட் எடுத்த தவெக.. அமைச்சர் விக்னேஷ் திடுக் தகவல் -
96,000 வாக்குகள் வித்தியாசத்தில்.. தவெக வேட்பாளரை ஜெயிக்க வைத்த தொகுதிக்கு இந்த நிலைமையா? -
ரூ.15 லட்சம் கோடி பஸ்பம் ஆகும்? சரிகிறது இந்தியாவின் தங்க’ சாம்ராஜ்யம்.. நாட்டையே உலுக்கும் சம்பவம் -
அதிகாலையே கணக்கில் வரவு வைக்கப்பட்ட ரூ.3000.. வந்தது மே மாதம் பேமெண்ட்.. அரசின் அசத்தல் மூவ்! -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
சென்னை சூட்கேஸில் தலை இல்லாத சடலம்... இப்படி ஒரு பெண்ணா? பார்கோடு தந்த மரண துப்பு.. அலறிய பெரம்பூர் -
சொத்துகளை மறைக்கும் சென்னை மேயர் பிரியா.. துணை மேயர் உள்பட 75% கவுன்சிலர்கள் 4 ஆண்டுகளாக ‘டிமிக்கி' -
அடித்து ஆடும் விஜய்.. வருகிறது ராமநாதபுரம் புதிய விமான நிலையம்.. பொருளாதார புரட்சிக்கு அடித்தளம்! -
ஸ்டாலின் காங்கிரஸுக்கு தந்த பவர்புல் ஷாக்! பாஜகவும் இல்லை.. அப்ப தேசிய அரசியலில் திமுகவின் ரூட் என்ன -
அதெப்படி திமிங்கலம்.. தமிழ்நாட்டிற்கு வரவேண்டிய ஒப்பந்தம் வரிசையா.. கரெக்ட்டா ஆந்திராவுக்கு போகுது! -
டெல்லியில் இந்தியா கூட்டணி ஆலோசனை.. திமுக, ஆம் ஆத்மி புறக்கணிப்பு.. வைகோ, திருமாவளவன் பங்கேற்பு -
மாதம் 2500 மகளிர் உரிமை தொகை தருவதற்கு தமிழக அரசுக்கு எவ்வளவு பணம் தேவை.. அரசுக்கு மாற்று வழிகள்












Click it and Unblock the Notifications