3 ஈழத்தமிழர்களை நாடுகடத்தக்கூடாது: பிரதமருக்கு வைகோ கோரிக்கை
சென்னை: ஈழத்தமிழர்கள் மூன்று பேர் நாடு கடத்துவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பிரதமரை மதிமுக பொதுச் செயலாளர் வைகோ வலியுறுத்தி கேட்டுக் கொண்டுள்ளார்.
இது தொடர்பாக பிரதமர் மன்மோகன் சிங், உள்துறை அமைச்சர் சுஷில் குமார் ஷிண்டே ஆகியோருக்கு, அவர் இன்று எழுதிய கடிதத்தில் கூறியுள்ளதாவது:
"தமிழகத்தில் தஞ்சம் அடைந்து, கடந்த இருபது ஆண்டுகளுக்கும் மேலாக அகதிகள் முகாம்களில் வசித்து வருகின்ற, ஈழ நேரு, செந்தூரன், இத்தாலியராஜன் (எ) சுந்தர்ராஜன் ஆகிய மூன்று ஈழத்தமிழர்களை, இலங்கைக்கு நாடு கடத்துவதற்கான நடவடிக்கையை இந்திய அரசு மேற்கொண்டு உள்ளது. அவர்களுக்கு எதிராக பொய்வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
கடந்த இருபது ஆண்டுகளாக, இத்தகைய நடவடிக்கையை இந்திய அரசு மேற்கொண்டது இல்லை. ஈழத்தமிழர்களை, அவர்களது விருப்பத்துக்கு மாறாக, நாடு கடத்தக் கூடாது என்று, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்து உள்ளது.
இந்த மூவரையும் இலங்கைக்கு அனுப்பினால், அவர்களது உயிர்களுக்கு உத்தரவாதம் இல்லை. இலங்கையின் இரக்கமற்ற போலீஸ் மற்றும் ராணுவத்தின் கைகளில் சிக்கி அவர்களின் வாழ்க்கை ஆபத்தாக முடியும். அவ்வாறு அனுப்பினால் அது மனித உரிமைகள் மீதான தாக்குதலாக இருக்கும்.
காயம்பட்ட தமிழக மக்களின் இதயத்தில் அமிலத்தை ஊற்றுவதாகவும் இருக்கும். எனவே, தமிழர்களுக்கு இழைக்கப்படும் இந்த அநீதியை தடுத்து நிறுத்த உடனடியாக தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்" என்று கேட்டுக் கொண்டுள்ளார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தலை எதிர்கொள்ள திமுகவின் இரட்டை வியூகம்.. இள ரத்தத்திற்கு முக்கியத்துவம்! -
டாஸ்மாக்கில் ரூ.3,600 கோடி ஊழல்.. லிஸ்ட் எடுத்த தவெக.. அமைச்சர் விக்னேஷ் திடுக் தகவல் -
96,000 வாக்குகள் வித்தியாசத்தில்.. தவெக வேட்பாளரை ஜெயிக்க வைத்த தொகுதிக்கு இந்த நிலைமையா? -
ரூ.15 லட்சம் கோடி பஸ்பம் ஆகும்? சரிகிறது இந்தியாவின் தங்க’ சாம்ராஜ்யம்.. நாட்டையே உலுக்கும் சம்பவம் -
அதிகாலையே கணக்கில் வரவு வைக்கப்பட்ட ரூ.3000.. வந்தது மே மாதம் பேமெண்ட்.. அரசின் அசத்தல் மூவ்! -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
சென்னை சூட்கேஸில் தலை இல்லாத சடலம்... இப்படி ஒரு பெண்ணா? பார்கோடு தந்த மரண துப்பு.. அலறிய பெரம்பூர் -
சொத்துகளை மறைக்கும் சென்னை மேயர் பிரியா.. துணை மேயர் உள்பட 75% கவுன்சிலர்கள் 4 ஆண்டுகளாக ‘டிமிக்கி' -
அடித்து ஆடும் விஜய்.. வருகிறது ராமநாதபுரம் புதிய விமான நிலையம்.. பொருளாதார புரட்சிக்கு அடித்தளம்! -
ஸ்டாலின் காங்கிரஸுக்கு தந்த பவர்புல் ஷாக்! பாஜகவும் இல்லை.. அப்ப தேசிய அரசியலில் திமுகவின் ரூட் என்ன -
அதெப்படி திமிங்கலம்.. தமிழ்நாட்டிற்கு வரவேண்டிய ஒப்பந்தம் வரிசையா.. கரெக்ட்டா ஆந்திராவுக்கு போகுது! -
டெல்லியில் இந்தியா கூட்டணி ஆலோசனை.. திமுக, ஆம் ஆத்மி புறக்கணிப்பு.. வைகோ, திருமாவளவன் பங்கேற்பு












Click it and Unblock the Notifications