அரசு பேருந்துகளுக்கு தனியார் பங்குகளில் டீசல்: போக்குவரத்து நெரிசல்
மானாமதுரை: தனியார் பெட்ரோல் பங்குகளில் பிஸியான நேரத்தில் அரசு பேருந்துகளுக்கு டீசல் நிரப்புவதால் பொதுமக்கள் பாதிக்கப்படுவதாக புகார் எழுந்துள்ளது.

சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தில் அரசு பேருந்துகளுக்கு போக்குவரத்து நெரிசல்மிக்க இடத்தில் உள்ள தனியார் பங்குகளில் டீசல் போடுவதால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. திருப்புவனம் கிளை பணிமனையில் 50 நகரப்பேருந்துகள் உள்ளன. இவற்றிற்கு தினசரி 3ஆயிரத்து 500லிட்டர் டீசல் தேவைப்படுகிறது. தற்போது பெட்ரோல் பங்குகளில் டீசல் 55.31 பைசாவாக விற்பனை செய்யப்படுகிறது. ஆனால் பெட்ரோலிய நிறுவனங்கள் அரசு போக்குவரத்து கழகத்திற்கு 66.31 பைசாவிற்கு விற்பனை செய்கின்றன. இதனால் போக்குவரத்து கழகங்களுக்கு கூடுதல் செலவீனம் ஏற்பட்டு வருகிறது. இதனை தடுக்க அரசு தனியார் பெட்ரோல் பங்குகளில் டீசல் போட அனுமதியளித்தது.
திருப்புவனத்தில் காலை மற்றும் மாலை வேளைகளில் அரசு பணிமனையில் டீசல் போடப்படும். தற்போது தனியார் பங்குகளில் டீசல் போட சொல்வதால் ஒரே நேரத்தில் 70லிட்டர் டீசல் போடப்படுகிறது. திருப்புவனத்தில் உள்ள தனியார் பெட்ரோல் பங்குகளில் மதிய நேரத்தில் அரசு பேருந்துகளுக்கு டீசல் போடப்படுகிறது. ஒரே நேரத்தில் அனைத்து அரசு பேருந்துகளக்கும் டீசல் போடப்படுவதால் ஏராளமான பேருந்துகள் வரிசையில் நிற்கின்றன.

மதுரை&ராமேஸ்வரம் தேசிய நெடுஞ்சாலையில் திருப்புவனம் நகரம் அமைந்திருப்பதால் எந்நேரமும் போக்குவரத்து நெரிசல் அதிகம் இருக்கும். பெட்ரோல் பங்குகளின் வெளியே நகரப்பேருந்துகள் இருபுறமும் நிற்பதால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வாகனங்கள் ஸ்தம்பித்து விடுகின்றன. மதிய நேரத்தில் கொளுத்தும் வெயிலில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதால் பயணிகளும் பொதுமக்களும் கடுமையாக பாதிக்கப்படுகின்றனர். எனவே அரசு பேருந்துகளுக்கு ஷிப்ட் முறையில் டீசல் போட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். இதுகுறித்து பொ-துமக்கள் தரப்பில் பலமுறை வேண்டுகோள் விடுத்தும் போக்குவரத்து கழக அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவே இல்லை. எனவே மாவட்ட நிர்வாகம் இதில் தலையிட்டு அரசு பேருந்துகளுக்கு டீசல் போடும் நேரத்தை மாற்றியமைக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications