ரக்ஷாபந்தன்: பெண்களுக்கு 'அன்பளிப்பாக' வெங்காயம் வழங்கிய பாஜக!
ஹைதராபாத்: ரக்ஷாபந்தனையொட்டி ஆண்களுக்கு பெண்கள் ராக்கி கட்டிவிடுவது வழக்கம்... அப்படி ராக்கி கட்டும் பெண்களுக்கு பாரதிய ஜனதா கட்சியோ அன்பளிப்பாக 'வெங்காயத்தை' வழங்கி பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
வெங்காயத்தின் விலை ரூ80ஐ தாண்டி ரூ100ஐ நோக்கி சென்று கொண்டிருக்கிறது. இது மத்திய அரசுக்கு பெரும் தலைவலியைக் கொடுத்திருக்கிறது. ஆனால் எதிர்க்கட்சியான பாஜகவோ இதை அரசியல் அஸ்திரமாக பயன்படுத்தத் தொடங்கியிருக்கிறது.
ஆந்திர மாநிலம் ஹைதராபாத்தில் உள்ள பாஜக தலைமையில் நேற்று ராக்கி கட்டும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் ஏராளமான பெண்கள் கலந்து கொண்டனர். பாஜகவின் மூத்த தலைவர்களான வெங்கையா நாயுடு, பண்டாரு தத்தாத்ரேயா, மாநில பாஜக தலைவர் கிஷண் ரெட்டி உள்ளிட்டோரும் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

இந்த நிகழ்ச்சியில் ராக்கி கட்ட கலந்து கொண்ட பெண்களுக்கு ஆச்சரியமளிக்கும் வகையில் ஒவ்வொருவருக்கும் தலா 2 வெங்காயங்கள் வழங்கப்பட்டன. இது தொடர்பாக கருத்து தெரிவித்த வெங்கையா நாயுடு, முன்பெல்லாம் வெங்காயத்தை நறுக்கும் போதுதான் கண்ணீர் வரும். இப்போது வெங்காயத்தை வாங்கும்போதே கண்ணீர் வருகிறது. இது ஆளும் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசின் தோல்வியையே காட்டுகிறது என்றார்.
இப்படி வெங்காயத்தை வழங்குவதற்காக பாஜக தலைமையகத்தில் பல கிலோ வெங்காயம் வாங்கிக் குவிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்!












Click it and Unblock the Notifications