லோக்சபா தேர்தலில் கொங்கு மக்கள் தேசிய கட்சி போட்டி: ஈஸ்வரன்
சென்னை: கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி வரும் லோக்சபா தேர்தலில் நிச்சயம் போட்டியிடும் என்று அக்கட்சியின் பொதுச்செயலாளர் ஈஸ்வரன் கூறியுள்ளார்.
சென்னையில் இன்று அவர் பேசும் போது கூறியுதாவது:
தேர்தலில் குற்றவாளிகளும் தண்டனை பெற்றவர்களும் போட்டியிடக்கூடாது என்பதில் உச்சநீதிமன்றமும், தேர்தல் ஆணையமும் உறுதியாக உள்ளது. ஆனால் இந்த விஷயத்தில் அரசியல் கட்சிகள் குற்றவாளிகளையே தேர்தலில் நிறுத்துவோம் என்பது போல் ஒன்று சேர்ந்து பிடிவாதமாக பேசி வருகின்றன.
எந்த இந்திய குடிமகனும் குற்றவாளிகள் கையில் நாட்டை ஒப்படைக்க விரும்ப மாட்டான். எனவே இது தொடர்பாக ஒரு கருத்துக்கணிப்பு தேர்தலை தேர்தல் ஆணையம் நடத்த வேண்டும். மக்கள் கருத்துப்படி சட்டங்கள் மாற்றப்பட வேண்டும்.
மழை காலத்தில் பெருமளவு தண்ணீர் வீணாக கடலில் கலக்கின்றது. இதை தடுக்க கிடப்பில் போடப்பட்டுள்ள நீர் பாசன திட்டங்களை நிறைவேற்ற வேண்டும்.
அரை டி.எம்.சி. தண்ணீருக்கு கர்நாடகத்தோடும் கேரளத்தோடும் போராடுகிறோம். ஆனால் நமது மாநிலத்திலேயே 10 டி.எம்.சி. தண்ணீருக்கு மேல் கடலில் வீணாக கலக்கிறது. இதை தடுக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி வரும் லோக்சபா தேர்தலில் நிச்சயம் போட்டியிடும். எந்த கட்சியுடன் கூட்டணி என்பது பற்றி ஜனவரி மாதம் நடைபெறும் எங்கள் கட்சி பொதுக்குழுவில் விவாதித்து முடிவு செய்வோம் இவ்வாறு அவர் கூறினார்.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications