For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ஈழ நேருவை இலங்கைக்கு நாடு கடத்த கோர்ட் இடைக்கால தடை- அரசுகளுக்கு நோட்டீஸ்!

By Mathi
Google Oneindia Tamil News

சென்னை: ஈழத் தமிழரான ஈழ நேருவை இலங்கைக்கு நாடு கடத்த சென்னை உயர்நீதிமன்றம் இடைக்கால தடை விதித்திருக்கிறது.

இலங்கை அகதிகளான செந்தூரன், ஈழ நேரு, சவுந்தரராசன் ஆகியோரை இலங்கைக்கு நாடு கடத்த மத்திய அரசு உத்தரவு பிறப்பித்திருக்கிறது. இதற்கு தமிழகத்தில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

இந்நிலையில் ஈழ நேருவின் மனைவி, இது தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் ஒரு மனுத்தாக்கல் செய்தார். அம் மனுவில், ஈழநேருவை இலங்கைக்கு அனுப்பினால் உயிருக்கு ஆபத்து இருக்கிறது. அதனால் அவரை இலங்கைக்கு அனுப்புவதற்கு தடை விதிக்க வேண்டும் என்று கோரியிருந்தார்.

இம்மனு மீது இன்று விசாரணை நடைபெற்றது. இந்த மனுவை பரிசீலனை செய்த நீதிபதி, ஈழ நேருவை இலங்கைக்கு அனுப்ப இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டார்.

மேலும், மனுதாரரின் புகார் தொடர்பாக மத்திய, மாநிலஅரசுகள் செப்டம்பர் 27-ந் தேதிக்குள் பதில் தரவும் உத்தரவிடப்பட்டுள்ளது. வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளார்.

English summary
The Madras High Court on Thursday stays deportation of Eezha Nehu to Sri lanka.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X