எல்லையில் 'தூங்கிய' இந்திய வீரர்கள்... திட்டமிட்டு தாக்கிய பாக். வீரர்கள்..

Subscribe to Oneindia Tamil

டெல்லி: எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதியில் இந்திய வீரர்கள் படு அசமஞ்சமாக இருந்ததை நன்றாக நோட்டமி்ட்டு வந்த பாகிஸ்தான் ராணுவத்தின் எல்லைப் பகுதி தாக்குதல் படையினர் நன்கு திட்டமிட்டுத் தாக்குதல் நடத்தியே ஐந்து இந்திய வீரர்களைக் கொன்றதாக முதல்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.

இந்திய வீரர்கள் அடிப்படை பாதுகாப்பு நடைமுறைகளைக் கூடக் கடைப்பிடிக்காமல் அஜாக்கிரதையாக நடந்து கொண்டது தெரிய வந்துள்ளது.

ஆகஸ்ட் 6ம் தேதி நடந்த இந்தத் தாக்குதலில் உயிர் பிழைத்த ஒரே ராணுவ வீரரான சாம்பாஜி குத்தேவிடம் நடத்தப்பட்ட விசாரணையில்தான் இந்த விவரம் தெரிய வந்துள்ளது.

நன்கு திட்டமிட்ட தாக்குதல்

நன்கு திட்டமிட்ட தாக்குதல்

பாகிஸ்தான் எல்லைப் பாதுகாப்புப்படையினர் நடத்திய இந்தத் தாக்குதல் நன்கு திட்டமிட்டு, இந்திய வீரர்களின் அஜாக்கிரதையை சரியாக கணித்து நடத்தப்பட்ட ஒன்றாகும்.

உஷாரில்லாத ரோந்து

உஷாரில்லாத ரோந்து

இந்த ஆறு பேரும் சற்றும் உஷாரில்லாமல் ரோந்துப் பணி்யில் ஈடுபட்டிருந்துள்ளனர்

ஆறு பேரும் மொத்தமாக ரோந்து

ஆறு பேரும் மொத்தமாக ரோந்து

சம்பவம் நடந்த இடத்தில் 6 இந்திய வீரர்கள் ரோந்துப் பணியில் ஈடுபட்டுள்ளனர். ஆறு பேரும் மொத்தமாக ரோந்து போயுள்ளனர். இது முதல் தவறு.

ஒரே இடத்தில் போய்ட்டு போய்ட்டு திரும்பியுள்ளளனர்

ஒரே இடத்தில் போய்ட்டு போய்ட்டு திரும்பியுள்ளளனர்

மேலும் இந்த ஆறு வீரர்களும் ஒரே பகுதியில் திரும்பத் திரும்ப ரோந்து போயுள்ளனர். இது 2வது தவறு.

5 பேர் தூங்கினர்

5 பேர் தூங்கினர்

ரோந்துப் பணியின்போது ஒரு இடத்தில் ஐந்து வீரர்கள் தூங்கியுள்ளனர். 6வது வீரரராக குத்தேவை சென்ட்ரி பார்க்கக் கூறியுள்ளனர்.

சிறுநீர் கழிக்கப் போன குத்தே

சிறுநீர் கழிக்கப் போன குத்தே

இந்த குத்தே, சிறுநீர் வந்ததால் அதைக் கழிக்கப் போயுள்ளார். அப்போதுதான் திடீரென பாகிஸ்தான் படையினர் அதிரடியாக வந்து தாக்கியுள்ளனர்.

நாலாபுறமும் தாக்குதல்

நாலாபுறமும் தாக்குதல்

திடீரென இந்தியப் பகுதிக்குள் ஊடுறுவி வந்த பாகிஸ்தான் படையினரைப் பார்த்து குத்தே சிலை போல சமைந்து போய் விட்டாராம். துப்பாக்கியை எடுத்துச் சுடக் கூடத் தோன்றாமல் அதிர்ந்து போய் நின்றுள்ளார்.

தூங்கிய 5 பேரும் பலி

தூங்கிய 5 பேரும் பலி

பாகிஸ்தான் படையினர் தூங்கிக் கொண்டிருந்த ஐந்து இந்திய வீரர்களையும் துப்பாக்கிகளால் சரமாரியாக சுட்டுள்ளனர். அவர்கள் எழுந்து சுதாரிப்பதற்குள் அத்தனையும் நடந்து முடிந்து விட்டது. வந்த வேலையை கச்சிதமாக முடித்து விட்டு பாகிஸ்தான் படையினர் ஓடி விட்டனர்.

நெருக்கமாக வைத்து சுட்டனர்

நெருக்கமாக வைத்து சுட்டனர்

இந்திய வீரர்களை நமது மண்ணுக்குள் புகுந்து மிகவும் நெருக்கமாக வைத்தே சுட்டுள்ளனர் பாகிஸ்தான் வீரர்கள். அந்த அளவுக்கு நமது வீரர்கள் மகா மெத்தனமாக இருந்துள்ளனர்.

நம்மவர்களின் அலட்சியமே காரணம்

நம்மவர்களின் அலட்சியமே காரணம்

பாகிஸ்தான் படையினர் நமது எல்லைக்குள் புகுந்து தாக்கும் வரை அதைக் கவனிக்காமலும், அலட்சியமாகவும், அஜாக்கிரதையாகவும் இருந்துள்ளனர் நமது வீரர்கள். மேலும் ரோந்துப் பணியின்போது கடைப்பிடிக்க வேண்டிய அடிப்படை நடைமுறைகளையும் அவர்கள் மதிக்காமல் நடந்துள்ளனர். மேலும் இந்த நேரத்தில் ஊடுறுவல் நடக்காது என்றும் கவனக்குறைவாக இருந்து விட்டனர்.

நன்கு வேவு பார்த்து

நன்கு வேவு பார்த்து

இந்திய வீரர்கள் மொத்தமாகவும், ஒரே பகுதியிலும் ரோந்து போய் வந்ததைப் பார்த்து, நன்றாக நோட்டமிட்டு திட்டமிட்டு இந்தத் தாக்குதலை நடத்தியுள்ளளனர் பாகிஸ்தான் வீரர்கள்.

இறந்த ஐவரும் பிகாரிகள்.. தப்பியவர் மராத்தி

இறந்த ஐவரும் பிகாரிகள்.. தப்பியவர் மராத்தி

கொல்லப்பட்ட ஐந்து வீரர்களும் 21 பிகார் ரெஜிமென்ட்டைச் சேர்ந்தவர்கள். தப்பிய குத்தே, 14 மராத்தா லைட் இன்பேன்டரி பிரிவைச் சேர்ந்தவர். இதில் குத்தே, இப்பகுதியில் பாதுகாப்புப் பணியில் புதிதாக இணைந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+