தேமுதிகவிலிருந்து விழும் அடுத்த சீட்டு.. ஆஸ்டின்?

தனது ஆலோசகர்களுடன் சென்னையில் முகாமிட்டு ஆஸ்டின் தீவிர ஆலோசனை நடத்தி வருகிறார். இன்றைக்குள் தனது முடிவை அவர் அறிவிக்கவுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.
பல்வேறு எம்.எல்.ஏக்கள் கட்சியை விட்டு விலகிய நிலையில் முக்கிய நிர்வாகி விலகவுள்ளது தேமுதிக தரப்பி்ல மீண்டும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
நாகர்கோவிலைச் சேர்ந்தவர் ஆஸ்டின். கன்னியாகுமரி மாவட்ட தேமுதிக பொறுப்பாளர் பதவியையும் வகித்து வந்தார். தேமுதிகவில் இணைந்ததும் 2009-ம் ஆண்டு நடந்த நாடாளுமன்ற தேர்தலில் நாகர்கோவில் தொகுதி தேமுதிக வேட்பாளராக போட்டியிட்டு தோல்வி அடைந்தார்.
2011-ம் ஆண்டு நடந்த சட்டசபை தேர்தலில் பத்மநாபபுரம் தொகுதியில் தேமுதிக வேட்பாளராக போட்டியிட்டு தோல்வியை தழுவினார். ஆனால் இவர் தோற்றுப் போனதற்கு உட்கட்சிப் பூசலே காரணம் என்று அப்போது பரபரப்பாக பேசப்பட்டது. இருப்பினும் ஆஸ்டின் தொடர்ந்து கட்சிப் பணியாற்றி வந்தார்.
மேலும் தனது பதவியைப் பயன்படுத்தி மாவட்டத்தில் தனக்கு எதிரான சிலரை கட்சியை விட்டு நீக்க வைத்தார். ஆனால் அவர்கள் மீண்டும் கட்சிக்குள் வந்து விட்டனர். இதனால் ஆஸ்டின் அதிர்ச்சி அடைந்தார்.
இந்த நிலையில் சமீப காலமாக தனது ஆதரவாளர்களுடன் நாகர்கோவில் அவரச ஆலோசனகளை நடத்தி வந்தார். தற்போது சென்னைக்கு வந்து முகாமிட்டுள்ளார். இங்கு தீவிர ஆலோசனை நடத்தி வருகிறார். அவர் கட்சியை விட்டு விலக தீர்மானித்திருப்பதாக தெரிகிறது.
இங்கிருந்து எங்கு போய் அவர் சேருவார் என்று தெரியவில்லை. அனேகமாக இவர் அதிமுக அல்லது காங்கிரஸுக்குப் போகலாம் என்று கூறப்படுகிறது.
ஆரம்பத்தில் ஆஸ்டின் அதிமுககாரர்தான். ராஜ்யசபா எம்பியாக இருந்துள்ளார். பின்னர் திருநாவுக்கரசு கட்சி தொடங்கியபோது அதில் சேர்ந்தார். நாகர்கோவில் தொகுதியிலிருந்து எம்.எல்.ஏவாக கடந்த 2001ல் வென்றார்.
பின்னர் திருநாவுக்கரசு கட்சியைக் கலைத்து விட்டுப் போனதால், இவர் மீண்டும் அதிமுகவுக்குத் திரும்பினார். பிறகுதான் தேமுதிகவுக்கு வந்தார்.
-
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்!












Click it and Unblock the Notifications