மத்திய – மாநில அரசுகள் சரியில்லை… லோக்சபா தேர்தலுக்கு முன் மக்களை சந்திப்பேன்: விஜயகாந்த்
சென்னை: மத்திய-மாநில அரசுகள் சரியாக செயல்படவில்லை. வரும் லோக்சபா தேர்தலில் மக்கள் தீர்ப்பு சொல்ல வேண்டும் என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் கூறியுள்ளார். வரும் லோக்சபா தேர்தலுக்கு முன்பு தமிழகம் முழுவதும் மக்களை சந்திக்க உள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
தனது 61-வது பிறந்த நாளையொட்டி வஜயகாந்த் இன்று கோயம்பேட்டில் உள்ள தலைமை கழகம் வந்தார். அங்கு கட்சி சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்த வறுமை ஒழிப்பு திட்டத்தின் கீழ் ஏழைகளுக்கு நல உதவிகள் வழங்கினார்.
100 பேருக்கு 3 சக்கர மோட்டார் சைக்கிள்கள், 100 பேருக்கு சைக்கிள்கள், எம்.ஜி.ஆர் காது கேளாதோர் பள்ளிக்கு ரூ.50ஆயிரம நன்கொடை ஆகியவற்றை விஜயகாந்த் வழங்கினார். அங்கு கூடியிருந்த தொண்டர்கள், நிர்வாகிகளிடையே அவர் பேசியதாவது:

குறைகளை கேட்பதில்லை
நான் எதிர்க்கட்சி தலைவராக இருப்பதால் நான் என்ன பேசினாலும் குறை சொல்கிறார்கள். எனது குறையையும் கேட்பதில்லை. மக்கள் குறையையும் கேட்பதில்லை.

வறுமை ஒழிப்பு தினம்
எனது பிறந்தநாளை வறுமை ஒழிப்பு தினமாக கொண்டாடுவது போல ஒவ்வொருவரும் கொண்டாடினால் வறுமை ஒழியாதா என்று மக்கள் ஏக்கத்துடன் உள்ளனர்.

நிலக்கரி ஊழல்
காங்கிரசை சேர்ந்த மத்திய மந்திரி நாராயணசாமி நிலக்கரி முறைகேடு தொடர்பாக சில பைல்களை மட்டும் காணவில்லை என்கிறார். ஆனால் சி.பி.ஐ. வேறொன்று சொ��்கிறது.

தொகுதி வாரியாக...
சேலத்தில் மாநாடு நடத்தியது போல் பாராளுமன்ற தேர்தலுக்கு முன் மீண்டும் மாநாடு நடத்தி தொண்டர்கள் குறை கேட்க முடிவு செய்துள்ளேன். விரைவில் தொகுதி வாரியாக சுற்றுப் பயணம் செய்து மக்களை நேரில் சந்தித்து குறைகேட்பேன்.

எல்லோரும் ஏமாற்���ுகின்றனர்
மத்திய-மாநில அரசுகள் சரியாக செயல்படவில்லை. இதற்கு மக்கள் தான் தீர்ப்பு சொல்ல வேண்டும். அண்ணா, எம்.ஜி.ஆர். பெயரைச் சொல்லிக் கொண்டு எல்லோரும் மக்களை ஏமாற்றுகிறார்கள் இவ்வாறு விஜயகாந்த் பேசினார்.

பிறந்தநாள் விழாவில்
விழாவில் அவைத் தலைவர் பண்ருட்டி ராமச் ச���்திரன், இளைஞர் அணி செயலாளர் எல்.கே.சுதீஷ், பொருளாளர் இளங்கோவன், எம்.எல்.ஏ.க்கள் பார்த்தசாரதி, சந்திரகுமார், நல்லதம்பி, சேகர், வெங்கடேசன், அனகை முருகேசன், சிவகொழுந்து, மாவட்ட செயலாளர்கள் க.செந்தாமரைக் கண்ணன், வி.என்.ராஜன், ஏ.எம்.காமராஜ், யுவராஜ், வர்த்தக அணி செயலாளர் எஸ்.எஸ்.யு. சந்திரன், கலை இலக்கிய அணி செயலாளர் பி.ஜி.ராஜ்மோகன், கே.எஸ்.மலர்மன்னன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி












Click it and Unblock the Notifications