4வதும் பெண் தானா: குஜராத்தில் விரக்தியில் 3 மகள்களுடன் தனக்கும் தீ வைத்த பெண்

Subscribe to Oneindia Tamil

அகமதாபாத்: குஜராத்தில் ஆண்கள் குழந்தை பெற்றுக்கொள்ள முடியாத விரக்தியில் பெண் ஒருவர் தனது 3 மகள்களுக்கு தீ வைத்துவிட்டு தானும் தீ வைத்துக் கொண்டார்.

குஜராத் மாநிலம் ஜுனாகத் மாவட்டம் கொடினார் தாலுகாவில் உள்ளது சாரா கிராமம். அந்த கிராமத்தைச் சேர்ந்தவர் வாஜு ரபாரி. அவரது மனைவி புனிபென் ரபாரி(40). அவர்களுக்கு முதன் முதலாக பிறந்த ஆண் குழந்தை பிறந்தவுடன் இறந்துவிட்டது. இதையடுத்து அவர்களுக்கு 4 பெண் குழந்தைகள் பிறந்தன. அண்மையில் தான் நான்காவது குழந்தை பிறந்தது.

பிறந்ததெல்லாம் பெண்ணாக இருந்ததால் புனிபென் வருத்தத்தில் இருந்தார். இந்நிலையில் வாஜு ஒரு மகளை அழைத்துக் கொண்டு ஆடு மேய்க்க சென்றுவிட்டார். அப்போது புனிபென் தனது 4 மாத குழந்தை கத்வி உள்ளிட்ட 3 மகள்கள் மீது தீ வைத்தார். பிறகு தனக்கும் தீ வைத்துக் கொண்டார். இதில் ஒரு மகள் தப்பியோடிவிட்டார்.

மீதமுள்ள காஜல்(6) மற்றும் 4 மாத குழந்தை ஆகியோர் உடல் கருகி பரிதாபமாக உயிர் இழந்தனர். புனிபென் உயிருக்கு ஆபத்தான நிலையில் ஜுனாகத் நகர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த போலீசார் புனிபென் மீது கொலை மற்றும் தற்கொலை முயற்சி வழக்குகள் பதிவு செய்துள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+