இலங்கையில் நவநீதம் பிள்ளை ஆய்வு! கிளிநொச்சி, முள்ளிவாய்க்கால் செல்கிறார்!!
கொழும்பு: இலங்கை சென்றுள்ள ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம் பிள்ளை இன்று கொழும்பில் ஆலோசனை நடத்தினார். இதைத் தொடர்ந்து யாழ்ப்பாணம் செல்லும் நவநீதம்பிள்ளை, இறுதிப் போர் நிகழ்ந்த கிளிநொச்சி, முள்ளிவாய்க்காலுக்கும் செல்ல இருக்கிறார்
இலங்கையின் மனித உரிமை நிலைமைகள் குறித்து ஆராய்வதற்காக ஒருவார கால பயணத்தை நவநீதம் பிள்ளை மேற்கொண்டிருக்கிறார். கொழும்பில் இன்று அமைச்சர் ரவூப் ஹக்கீமை முற்பகலில் அவர் சந்தித்துப் பேசினார்.

ஹக்கீமுடன் ஆலோசனை
கொழும்பில் ஹக்கீமை நவநீதம் பிள்ளை இன்று சந்தித்துப் பேசினார். அமைச்சர் என்ற வகையிலும் முஸ்லிம்கள் கட்சியின் தலைவர் என்ற அடிப்படையிலும் பள்ளிவாசல்கள் மீதான தாக்குதல்கள் குறித்து நவநீதம்பிள்ளை கேட்டறிந்தார்.

பயங்கரவாத தடுப்பு சட்டம்
அத்துடன் பயங்கரவாத தடுப்புச்சட்டம், கருத்துச் சுதந்திரம், காணாமல் போனோர் மற்றும் தடுத்து வைக்கப்பட்டுள்ளோர், இராணுவ மற்றும் போலீசாரிடையேயான சிக்கல்கள், சட்டம் ஒழுங்கு தொடர்பான புதிய அமைச்சகம், நல்லிணக்க ஆணைக் குழு பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துதல் ஆகியவை பற்றியும் விவாதிக்கப்பட்டிருக்கின்றன.

யாழில் இருந்து கிளிநொச்சி.
யாழ்ப்பாணத்தின் பல பகுதிகளைப் பார்வையிடும் நவநீதம் பிள்ளை, ஏ9 வீதி வழியே பயணித்து கிளிநொச்சிக்கு செல்கிறார். அப்படி செல்லும் வழியில் போரினால் பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சந்தித்து தற்போதைய நிலவரம் குறித்து கேட்டறிய இருக்கிறார்.

கிளிநொச்சியில் இருந்து முள்ளிவாய்க்கால்
கிளிநொச்சியைத் தொடர்ந்து இறுதி யுத்தம் நடந்த புதுமாத்தளன் மற்றும் முள்ளிவாய்க்கால் பகுதிகளையும் நவநீதம்பிள்ளை பார்வையிடுகிறார்.

திருகோணமலையில்..
தமிழர்கள் வாழும் மற்றொரு பகுதியாக கிழக்கு மாகாணத்தில் திருகோணமலையில் வரும் 28-ந் தேதியன்று போரினால் பாதிக்கப்பட்ட மக்களையும், அரசாங்க அதிகாரிகளையும், மக்கள் பிரதிநிதிகளையும் அவர் சந்தித்துப் பேசுகிறார். அப்போது இலங்கை ராணுவத்தின் ரகசிய முகாம்கள் பற்றியும் நவநீதம் பிள்ளையிடம் தெரிவிக்கப்பட இருக்கிறது.

வெளிநாடு போன ராஜபக்சே
நவநீதம் பிள்ளை கொழும்பு வந்துள்ள நிலையில் இலங்கை அதிபர் மகிந்த ராஜபக்ச திடீரென வெளிநாடு சென்றுவிட்டார்.
30-ந் தேதி ராஜபக்சே, த.தே.கூட்டமைப்பினருடன் ஆலோசனை இருப்பினும் இலங்கை அதிபர் ராஜபக்சேவையும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரையும் கொழும்பில் வரும் 30-ந் தேதியன்று நவநீதம் பிள்ளை சந்திப்பார் என்று தெரிகிறது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications