ஜெ. சொத்துக் குவிப்பு வழக்கு- அரசு வழக்கறிஞரை திரும்பப் பெற்றது கர்நாடகா!
பெங்களூர்: தமிழக முதல்வர் ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு வழக்கில் ஆஜராகி வந்த அரசு வழக்கறிஞர் பவானிசிங்கை கர்நாடக அரசு இன்று அதிரடியாக திரும்பப் பெற்றுக் கொண்டது.
1991-96 ஆம் ஆண்டு தமிழக முதல்வராக ஜெயலலிதா பதவி வகித்த போது வருமானத்துக்கு அதிகமாக ரூ66 கோடி சொத்து குவித்தார் என்பது வழக்கு. இந்த வழக்கில் சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோரும் சேர்க்கப்பட்டுள்ளனர்.
பல்வேறு முட்டுக்கட்டுகளை தாண்டி பெங்களூர் சிறப்பு நீதிமன்றத்தில் வழக்க்கின் இறுதிக் கட்ட விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் அண்மையில் திடீரென திமுக சார்பில் ஒரு மனுத்தாக்கல் செய்யப்பட்டது. அம்மனுவில் திமுக தரப்பினர் தங்களையும் வழக்கில் வாதாடவும் அரசு வழக்கறிஞருக்கு உதவவும் அனுமதி கோரப்பட்டது.

இதற்கு பெங்களூர் நீதிமன்றம் அனுமதி கொடுத்திருந்தது. இதன் பின்னர் கர்நாடகா உயர்நீதிமன்றத்தில் திமுக சார்பில் ஒரு மனுத்தாக்கல் செய்யப்பட்டது. அம்மனுவில், வழக்கை பெங்களூருக்கு மாற்றியதன் நோக்கம் நிறைவேறாத சூழல் உள்ளது. தற்போதைய அரசு வழக்கறிஞர் பவானிசிங்கை மாற்ற வேண்டும் என்று அதில் கூறப்பட்டு இருந்தது.
இம்மனு மீது பதிலளிக்க கர்நாடகா அரசுக்கு அம்மாநில உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இந்த நிலையில் இன்று திடீரென கர்நாடகா மாநில தலைமைச் செயலாளர் நாகராஜ் வெளியிட்ட உத்தரவு ஒன்றில், ஜெயலலிதா மீதான சொத்து குவிப்பு வழக்கில் ஆஜராகி வந்த அரசு வழக்கறிஞர் பவானிசிங் மாற்றப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். இது இந்த வழக்கில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள்












Click it and Unblock the Notifications