பெண்களுக்கு சாதகமான திருமணச் சட்டம்.. ராஜ்யசபாவில் நிறைவேறியது
டெல்லி: பெண்களுக்கு முற்றிலும் சாதகமான, இந்து திருமணச் சட்டம் மற்றும் சிறப்புத் திருமணச் சட்ட திருத்த மசோதா ராஜ்யசபாவில் நிறைவேற்றப்பட்டது.
இந்த சட்டத் திருத்த மசோதாவில் பெண்களுக்குச் சாதகமான பல அம்சங்கள் சேர்க்கப்பட்டுள்ளன.
மேலும் கணவர்களின் சொத்துக்களிலிருந்து கணிசமான பங்கைப் பெண்கள் பெறவும் இதில் வழி செய்யப்பட்டுள்ளது.

முற்போக்கு சட்டம்
இந்த சட்ட மசோதாவுக்கு ராஜ்யசபாவில் கட்சி பாகுபாடின்றி அனைத்துக் கட்சியினருமே வரவேற்பு அளித்தனர். இதை முற்போக்கு சட்டம் என்றும் அவர்கள் வர்ணித்தனர்.

ஆண்களுக்கு எதிராக பயன்படுத்தப்படலாம்
இருப்பினும் சில எம்.பிக்கள், இந்த சட்டம் ஆண்களுக்கு எதிராக பழிவாங்கப் பயன்படுத்தப்படலாம் என்று கவலை தெரிவிக்கத் தவறவில்லை.

கபில் சிபல் விளக்கம்
மசோதா மீதான விவாதத்திற்குப் பின்னர் பேசிய சட்ட அமைச்சர் கபில் சிபல், பெண்களின் உரிமையை மேலும் பாதுகாக்க வேண்டியது அவசர அவசியமாகும். உலகம் முழுவதும் மக்கள்தொகையில் பாதிப் பேர் பெண்களாக இருந்தாலும், அவர்களில் 20சதவீதம் பேரிடம்தான் சொத்துக்கள் உள்ளன. மற்றவர்கள் கணவர்களையும் அவர்களது குடும்பத்தையும்தான் நம்பியிருக்கும் நிலை இருக்கிறது.

விவாகரத்தில் ஆண்களுக்கு பாதிப்பு வராது
இந்த சட்டத்தில் உள்ள விவாகரத்து தொடர்பான முக்கிய அம்சமானது ஆண்களை பாதிக்காது. காரணம், திருமணத்தை முறிக்க விரும்பும் ஆண்களும் அதற்காக கோர்ட்டை அணுகலாம். பெண்களுக்கு உள்ள அதே உரிமை அவர்களுக்கும் உள்ளது. விவாகரத்து கோரி மனு செய்யும் முன்பு கணவனும், மனைவியும் தனித்து 3 ஆண்டுகள் வசிக்க வேண்டும்.

கணவரின் சொத்தில் மனைவிக்குப் பங்கு
கணவரின் சுய சம்பாத்தியத்தில் வாங்கப்பட்ட சொத்துக்களில் மனைவிக்கு உள்ள பங்கு குறித்து நீதிமன்றங்களே முடிவு செய்யலாம். அதேசமயம், கணவரின் பாரம்பரியச் சொத்தில் மனைவி உரிமை கொண்டாட முடியாது. இந்த விஷயங்கள் ஒவ்வொரு வழக்கின் தனித்துவத்தைப் பொறுத்தது.

முஸ்லீம் பெண்களை கணக்கில் கொள்ளவில்லையே!
முன்னதாக விவாதத்தில் பங்கேற்றுப் பேசிய பாஜக உறுப்பினர் நஜ்மா ஹெப்துல்லா கூறுகையில், அனைத்துப் பெண்களுக்கும் இந்த அரசு ஒரே சட்டத்தைக் கொண்டு வ்ந்துள்ளது. நாட்டில் உள்ள 10 கோடி முஸ்லீம் பெண்களுக்கு சாதகமானதாக இந்தசட்டம் அமையவில்லை. அவர்களை இந்த அரசு புறக்கணித்துள்ளது, கண்டுகொள்ளாமல் விட்டுள்ளது என்று குற்றம் சாட்டினார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications