நவநீதம் பிள்ளையுடன் எழிலன் மனைவி சந்திப்பு! முல்லைத்தீவில் ஆய்வு!!
யாழ்ப்பாணம்: இலங்கையில் தமிழர் வாழும் யாழ்ப்பாணம் மற்றும் முல்லைத்தீவு பகுதிகளில் ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம் பிள்ளை நேற்று ஆய்வு நடத்தினார். அவரை தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் திருகோணமலை அரசியல்துறை பொறுப்பாளர் எழிலன் மனைவி அனந்தியும் சந்தித்து பேசினார்.
இலங்கை வருகை தந்துள்ள நவநீதம்பிள்ளை தலைமையிலான ஐ.நா. குழு நேற்றுமுன் தினம் யாழ்ப்பாணம் சென்றது.

எழிலன் மனைவி சந்திப்பு
நேற்று யாழ்ப்பாணத்தில் உள்ள அகதிகளுக்கான ஐ.நா அலுவலகத்தில் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் மூத்த தலைவர்களில் ஒருவரான எழிலனின் மனைவி அனந்தி, நவநீதம் பிள்ளை குழுவினரை சந்தித்தார்.

நவநீதம் பிள்ளையிடம் சொன்னது என்ன?
அப்போது, போரின் இறுதிக்கட்டத்தில் இலங்கை படையினரிடம் எனது கவணர் உள்ளிட்ட, பெருமளவு போராளிகள், பொறுப்பாளர்கள், பொதுமக்கள் பாதிரியார் பிரான்சிஸ் ஜோசப் அடிகளார் தலைமையில் சரணடைந்தனர். அவர்களின் நிலை என்னவென்று இதுவரை தெரியவில்லை என்று முறையிட்டார்.

முள்ளிவாய்க்காலில் நவநீதம் பிள்ளை
இதைத் தொடர்ந்து இறுதிப் போர் நடந்த புதுமாத்தளன், முள்ளிவாய்க்கால் பகுதிகளை நவநீதம் பிள்ளை பார்வையிட்டுள்ளார்.

மக்களுடன் சந்திப்பு
இறுதிப்போர் நடந்த பகுதிகளை பார்வையிட்ட நவநீதம்பிள்ளை, கேப்பாப்பிலவில் இருந்து வெளியேற்றப்பட்டு, தற்காலிக தங்குமிடங்களில் குடியேற்றப்பட்டுள்ள மக்களையும், போரினால் பாதிக்கப்பட்ட மக்களையும் சந்தித்துப் பேசினார். அப்போது மக்கள் கண்ணீர்விட்டு கதறி அழுதனர்.

கதறிய முல்லைத்தீவு மக்கள்
நவநீதம்பிள்ளையிடம், முல்லைத்தீவு மக்கள் காணாமல் போனவர்களை மீட்டுத் தரும்படியும் இலங்கை படையினரால் பறிக்கப்பட்ட தமது நிலம், வாழ்விடங்களை மீட்டுத் தரும்படியும் கோரிக்கைகளை முன் வைத்தனர்.

திருகோணமலை பயணம்
முல்லைத்தீவில் பயணத்தை முடித்துக் கொண்ட நவநீதம்பிள்ளை நேற்றிரவு இரணைமடு ஓடுபாதையில் இருந்து புறப்பட்டு திருகோணமலைக்கு சென்றார்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications