2.5 டன் ரேஷன் அரிசி கடத்தல்.. தூத்துக்குடியில் 5 பேர் கைது
தூத்துக்குடி: தூத்துக்குடி அருகே ரேசன் அரிசி கடத்திய 5பேரை போலீசார் கைது செய்தனர்.
தூத்துக்குடி-திருச்செந்தூர் வழித்தடத்தில் லாரியில் ரேசன் அரிசி கடத்தப்படுவதாக பறக்கும்படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. தகவலின்பேரில், மாவட்ட வழங்கல் அலுவலர் காமாட்சி கணேஷ் தலைமையில் திருச்செந்தூர் வட்ட வழங்கல் அலுவலர் செந்தில்வேல், பறக்கும் படை தாசில்தார் வீராசாமி, ஆறுமுகனேரி போலீஸ் இன்ஸ்பெக்டர் பார்த்திபன், உணவு கடத்தல் தடுப்பு ஆய்வாளர் முத்து பிரேம்சந்த் மற்றும் அதிகாரிகள் குழுவினர் காயல்பட்டடணம் ஓடக்கரை பகுதியில் வாகனச் சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது, அந்த வழியாக வேகமாக வந்த லாரியை வழிமறித்து சோதனை செய்தனர். சோதனையின்போது. லாரியில் சுமார் ரூபாய் 50 ஆயிரம் மதிப்புள்ள 2.5 டன் ரேஷன் அரிசி 53 மூடைகளில் கடத்தப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது. அதனைத்தொடர்ந்து ரேஷன் அரிசி மற்றும் அதனை கடத்த பயன்படுத்தப்பட்ட லாரி பறிமுதல் செய்யப்பட்டது.

லாரி டிரைவரான மெஞ்ஞானபுரம் ராமசாமி மகன் மாசானமுத்து(36), அதே பகுதியைச் சேர்ந்த தினியோன் மகன் எபனேசர் (18), மகராஜா மகன் இசக்கிராஜா (20), பரமன்குறிச்சி சக்திவேல் மகன் முத்துக்குமார் (19) மற்றும் சென்னை சுயம்புலிங்கம் மகன் பூவலிங்கம்(26) ஆகிய 5பேரையும் ஆறுமுகநேரி போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக












Click it and Unblock the Notifications