3 ஆண்டுகளாக, 14 சிறுமிகளை மிரட்டிக் கற்பழித்த விடுதிக்காப்பாளர் கைது
சியாங்: அருணாச்சலப் பிரதேசத்தில், தனியார் பள்ளி விடுதி ஒன்றில் தங்கி கல்வி பயின்று வந்த மாணவிகள் 14 பேரை மிரட்டி பலாத்காரம் செய்து வந்த வேற்று மாநிலத்தைச் சேர்ந்த விடுதி காப்பாளர் கைது செய்யப்பட்டுள்ளார்.
அருணாச்சலப் பிரதேசம், மேற்கு சியாங் மாவட்டத்தில் உள்ள லிகாபாய் என்ற ஊரில் உள்ள தனியார் பள்ளிக்குச் சொந்தமான விடுதி ஒன்றில் 3 முதல் 16வயது வரை உள்ள மாணவிகள் பலர் தங்கியுள்ளனர்.
அந்த விடுதிக்கு வேற்று மாநிலத்தைச் சேர்ந்த ஒருவர் விடுதிக் காப்பாளராக இருந்து வந்துள்ளார். இவர் கடந்த 3 ஆண்டுகளாக விடுதியில் தங்கியுள்ள 3 முதல் 13 வயது வரை உள்ள சிறுமிகளை மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்து வந்துள்ளார்.
இவரது மிரட்டலுக்கு பயந்த மாணவிகள் சம்பத்தை வெளியில் சொல்லாமல் இருந்து வந்துள்ளனர். ஒரு கட்டத்தில் விடுதி காப்பாளரின் கொடுமைகளைத் தாங்க இயலாமல், இது குறித்து தலைமை ஆசிரியரிடம் புகார் தெரிவித்துள்ளனர். ஆனால், அவர் நடவடிக்கை எதுவும் எடுக்கவில்லை எனச் சொல்லப் படுகிறது.
இதனால விடுதி சுவரை ஏறிக் குதித்து, வெளியே தப்பிச் சென்ற மாணவிகள் விடுதி காப்பாளர் மீது அருகிலிருந்த போலீஸ் ஸ்டேஷனில் புகார் அளித்தனர். தகவலறிந்த உள்ளூர் மக்கள் போராட்டத்தில் குதித்தனர். அதனைத் தொடர்ந்து விடுதி காப்பாளர் கைது செய்யப்பட்டார். மேலும், பள்ளி முதல்வர் மற்றும் மேலும் 2 ஊழியர்கள் விசாரணைக்காக கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.
பாதிக்கப்பட்ட சிறுமிகளுக்கு எதிராக சில சமூக நல நிறுவனங்கள் மற்றும் தொண்டு நிறுவனங்களும் எதிர்ப்பில் இறங்கியுள்ளன. இதனால், குற்றவாளிகளுக்கு ஜாமின் கொடுக்கக்கூடாது என்ற எதிர்ப்பு வலுத்துள்ளது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications