மனைவியைத் தாக்கிய வழக்கு: ஓம் பூரியைக் கைது செய்ய இடைக்காலத் தடை!
மும்பை: மனைவியை உருட்டுக்கட்டையால் தாக்கிய குற்றச்சாட்டில் பிரபல நடிகர் ஓம் பூரியைக் கைது செய்ய இடைக் காலத் தடை விதித்துள்ளது நீதிமன்றம்.
அர்த், ஆக்ரோஷ், ஆரோகன் படங்களில் சிறந்த நடிகருக்கான தேசிய விருது பெற்றவர் நடிகர் ஓம் பூரி. காந்தி படத்திலும் முக்கிய கேரக்டரில் நடித்தார். இந்தியில் முன்னணி ஹீரோக்களுடன் ஏராளமான படங்களில் நடித்துள்ளார்.
ஓம் பூரி தனது இரண்டாவது மனைவி நந்திதாவுடன் மும்பையில் உள்ள வீட்டில் வசித்து வந்தார்.
திடீரென அவரது முதல் மனைவி சீமா கபூர், மீண்டும் வந்து சேர்ந்து கொண்டார். இதனால் நந்திதாவுக்கும் ஓம் பூரிக்கும் பெரும் சண்டை ஏற்பட்டுவிட்டது.

இதனால் வீட்டுக்குப் போவதைத் தவிர்த்த ஓம் பூரி, செலவுக்குப் பணம் தருவதையும் நிறுத்திவிட்டாராம். இதைக் கேட்ட நந்திதாவை கைகளாலும் உருட்டுக்கட்டையாலும் தாக்கினாராம் ஓம் பூரி. இதுகுறித்து கடந்த வாரம் போலீசில் புகார் செய்தார் நந்திதா.
தாக்குதலில் உடலில் காயம் ஏற்பட்டு இருந்ததையும் போலீசாரிடம் காட்டினார். ஓம் பூரி அடித்ததை தனது தாயும் வீட்டு வேலைக்காரியும் பார்த்தனர் என்றும் தெரிவித்தார்.
இதையடுத்து ஓம் பூரி மீது 324, 504 மற்றும் 506 பிரிவுகளின் கீழ் மும்பை போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரிப்பதற்காக ஓம் பூரியை தேடி வந்தனர். போலீசாரிடம் இருந்து பிடிபடாமல் ஓம் பூரி தலைமறைவாக இருந்து வருகிறார்.
இந்நிலையில், மும்பை நீதிமன்றத்தில் அவர் நேற்று முன்ஜாமின் மனு தாக்கல் செய்தார்.
இந்த மனுவை விசாரித்த நீதிபதி நடிகர் ஓம் பூரியை வரும் 30ம் தேதி வரை கைது செய்யக்கூடாது என்று இடைக்கால தடைவிதித்து உத்தரவிட்டார்.
ஓம் பூரியின் முன்ஜாமின் மனுவின் மீதான விசாரணையை வரும் 30ம் தேதி நடைபெறும் என்று தெரிவித்த நீதிபதி அதுவரை நடிகர் ஓம் பூரி நாள்தோறும் போலீஸ் நிலையத்தில் ஆஜராகி விசாரணைக்கு ஒத்துழைக்க வேண்டும் நிபந்தனை விதித்துள்ளார்.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications