ஜெ. சொத்து குவிப்பு வழக்கில் இருந்து விடுவிப்பு- சுப்ரீம் கோர்ட்டில் பவானிசிங் முறையீடு!
பெங்களூர்: தமிழக முதல்வர் ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு வழக்கில் ஆஜராகி வந்த அரசு வழக்கறிஞரான பவானிசிங் திடீரென விலக்கிக் கொள்ளப்பட்டதை எதிர்த்து அவர் உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடர முடிவு செய்துள்ளார்.
1991-96ஆம் ஆண்டு முதல் தமிழக முதல்வராக ஜெயலலிதா பதவி வகித்த போது வருமானத்துக்கு அதிகமாக சொத்துக் குவித்தார் என்பது வழக்கு. இந்த வழக்கில் சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் சேர்க்கப்பட்டுள்ளனர்.

வழக்கில் இணைந்த திமுக
பல முட்டுக்கட்டைகளைத் தாண்டி பெங்களூர் நீதிமன்றத்தில் இந்த வழக்கின் இறுதி விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் திமுக இந்த வழக்கில் தம்மையும் இணைத்துக் கொள்ள அனுமதி கோரியது. பெங்களூர் நீதிமன்றமும் இதற்கு அனுமதி அளித்தது.

பவானிசிங்கை நீக்க கோரி திமுக மனு
இதைத் தொடர்ந்து அரசு வழக்கறிஞர் பவானிசிங்கை பதவியிலிருந்து நீக்கக் கோரி கர்நாடக உயர் நீதிமன்றத்தில் திமுக பொதுச் செயலாளர் க.அன்பழகன் மனு தாக்கல் செய்தார்.

கர்நாடகாவுக்கு நோட்டீஸ்
இந்த மனுவுக்கு விளக்கம் அளிக்குமாறு கர்நாடக அரசு தலைமைச் செயலாளர், சட்டத் துறை செயலாளர் ஆகியோருக்கு கர்நாடக உயர் நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியது.

பவானிசிங் அதிரடியாக வாபஸ்
இந்நிலையில் கடந்த 26-ஆம் தேதி பவானி சிங்கை அரசுத் தரப்பு வழக்கறிஞராக நியமித்த உத்தரவை கர்நாடக அரசு திடீரென திரும்பப் பெற்றது.

ஹைகோர்ட்டில் முறையீடு
கர்நாடக அரசின் நடவடிக்கையை எதிர்த்து அம்மாநில உயர் நீதிமன்றத்தில் பவானிசிங் மனு தாக்கல் செய்தார். இம் மனு மீதான விசாரணை நீதிபதி ஏ.எஸ்.போப்பண்ணா முன்னிலையில் நேற்று விசாரணைக்கு வந்த போது தமது மனுவை பவானிசிங் திரும்பப் பெற்றார்.

சுப்ரீம் கோர்ட்டுக்குப் போகிறோம்
மேலும், தமது நியமன உத்தரவை திரும்பப் பெற்றுள்ளதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யவிருப்பதாக அவர் தெரிவித்தார்.
-
உச்ச நீதிமன்றத்தில் நேரடியாக நீதிபதியான 2-வது பெண் வழக்கறிஞர்! கோவையை சேர்ந்த மோகனா.. பின்னணி -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்!












Click it and Unblock the Notifications