அப்பாடா 6 யானைகளையும் புடிச்சிட்டாங்க... ஆபரேசன் மலை சக்சஸ்.. ஆனால், கும்கி யானைக்கு மதம் பிடித்தது!
திருவண்ணாமலை: திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் கடந்த சில மாதங்களாக குடியிருப்புகளுக்குள் புகுந்து அட்டாகசம் செய்து வந்து 6 காட்டு யானைகளை மயக்க ஊசி போட்டு பிடித்துள்ளனர் வனத்துறை அதிகாரிகள்.
திருவண்ணாமலை மாவட்டம் தண்டராம்பட்டு, மேல்செங்கம் பகுதிகளில் கடந்த சில மாதங்களாக 6 காட்டு யானைகள் விளை நிலங்களில் புகுந்து சேதப்படுத்தி வந்தது.
இந்த யானைகளால் அந்த பகுதி மக்கள் கடும் அதிர்ச்சி அடைந்திருந்தனர். அந்த யானைகளை திரும்பவும் காட்டுக்குள் அனுப்பும் முயற்சியில் வனத் துறையினர் பலமுறை ஈடுபட்டும் பலனளிக்கவில்லை.

ஆபரேசன் மலை
திருவண்ணாமலை, வேலூர், தருமபுரி, சேலம், விழுப்புரம் உள்ளிட்ட மாவட்டங்களில் சில ஆண்டுகளாக அட்டகாசம் செய்து வந்த 6 காட்டு யானைகளை பிடித்து, முதுமலை மற்றும் ஆனைமலை (டாப்சிலிப்) முகாம்களில் அடைக்கும் பெரிய முயற்சியான ‘ஆபரேஷன் மலை' கடந்த 26ம் தேதி தொடங்கியது.

5 கும்கிகள்
மயக்க ஊசி செலுத்துவதற்கான மருத்துவக்குழுவினர், வன உயிரியல் விஞ்ஞானிகள், வனத்துறை அதிரடிப்படையினர், வேட்டை தடுப்பு காவலர்கள் ஆகியோர் 5 கும்கி யானைகளின் உதவியுடன் யானைகளை பிடிக்கும் பணியில் ஈடுபட்டனர்.

ஒற்றைக் கொம்பன்
சுமார் 22 வயதுள்ள பெண் யானை, 20 வயதுள்ள ஒற்றை கொம்பன் எனப்படும் ஆண் ஆகியவற்றை மயக்க ஊசி செலுத்தி நேற்று முன்தினம் மாலை பிடித்தனர். அதில், ஆண் யானை யை மட்டும் நேற்று அதிகாலை 2 மணி அளவில் லாரி மூலம் பாதுகாப்பாக ஆனைமலை முகாமுக்கு அனுப்பி வைத்தனர். மற்ற யானைகளை பிடிப்பதற்காக பெண் யானையை மட்டும் தொடர்ந்து காட்டுப்பகுதியில் இரும்பு சங்கிலியால் கட்டி வைத்தனர்.

விடிய விடிய போராட்டம்
இதனைதொடர்ந்து காட்டுக்குள் தப்பியோடிய 4 யானைகளை விடிய விடிய போராடி துப்பாக்கி மூலம் மயக்க ஊசி செலுத்தி பிடித்தனர்.
பிடிபட்ட 2 பெண் யானை களையும் நேற்று இரவு தனித்தனி வாகனங்களில் ஏற்றி, முதுமலை முகாமுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

கும்கி யானைக்கு மதம்
காட்டு யானைகளை பிடிக்க அழைத்து வரப்பட்ட, ஒரு, "கும்கி' யானைக்கு, மதம் பிடித்ததால், அந்த யானை தனியாக கட்டி வைக்கப்பட்டு, கண்காணிக்கப்பட்டது.

கும்கியாகும் ஒற்றைக் கொம்பன்
திருவண்ணாமலையில் இருந்து பிடித்து வரப்பட்ட ஒற்றை கொம்பன் ஆண் யானையை, டாப்சிலிப் வரகளியார் முகாமில் தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்த மரக்கூண்டில் அடைத்துள்ளனர். அதை மற்ற காட்டுயானைகள் தாக்காமல் இருக்க 6 கும்கி யானைகள் பாதுகாப்பாக நிறுத்தப்பட்டுள்ளன. இனி, இந்த யானையை கும்கியாக மாற்ற பயிற்சி அளிக்கப்படும் என வனத்துறையினர் தெரிவித்தனர்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications