ஜெயலலிதாவுடன் சி.பி.எம். பொதுச்செயலர் பிரகாஷ் காரத் சந்திப்பு!
சென்னை: தமிழக முதல்வர் ஜெயலலிதாவை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலர் பிரகாஷ் காரத் சென்னையில் இன்று சந்தித்துப் பேசினார்.
லோக்சபா தேர்தலில் தமிழகம் மற்றும் புதுவையில் உள்ள மொத்தம் 40 தொகுதிகளிலும் அதிமுக தனித்துப் போட்டியிட்டு கைப்பற்றும் என்றுதான் ஜெயலலிதா தொடர்ந்து பேசிவருகிறார்.

சென்னையில் இன்று கூட நடைபெற்ற திருமண நிகழ்ச்சி ஒன்றில் பேசிய ஜெயலலிதா, 40 தொகுதிகளிலும் வெல்வோம் என்று பேசியிருந்தார். இருப்பினும் அதிமுகவுடன் இடதுசாரிகள் கூட்டணி அமைக்கக் கூடும் என்று கூறப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் சென்னை தலைமைச் செயலகத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலர் பிரகாஷ் காரத், ஜெயலலிதாவை சந்தித்துப் பேசினார். இந்த சந்திப்பு மரியாதை நிமித்தமானது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இச்சந்திப்புக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய பிரகாஷ் காரத், ரூபாய் மதிப்பு வீழ்ச்சிக்கு மத்திய அரசின் தவறான பொருளாதார கொள்கையே காரணம் என்று சாடினார்.












Click it and Unblock the Notifications