கோவையில் மான் வேட்டையாடிய 7 பேர் கைது

கோவை, மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதிகளில், காட்டுயானை, மான், காட்டெருமை உள்ளிட்ட, வனவிலங்குகள், அதிகமாக உள்ளன. நேற்று முன்தினம், போளுவாம்பட்டி வனச்சரக பகுதிகளில் ஊடுருவிய கும்பல், மான் வேட்டையாடுவதாக, வனத் துறையினருக்கு தகவல் கிடைத்தது.
வனத் துறையினர், சிறுவாணி மெயின் ரோடு - இருட்டுபள்ளம் பஸ் ஸ்டாப் அருகே, தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர். வேகமாகச் சென்ற ஜீப், இரு கார்களை நிறுத்தி சோதனையிட்ட போது, இரு புள்ளிமான்களை வேட்டையாடி, கார் "டிக்கி'யில் கடத்தியது தெரிய வந்தது. வாகனங்களில் வந்த ஏழு பேரையும், வனத் துறையினர் கைது செய்தனர். மான் வேட்டைக்கு பயன்படுத்திய, 0.22 ரக துப்பாக்கி, வாகனங்கள், பறிமுதல் செய்யப்பட்டன.
7 பேர் மீதும் தமிழ்நாடு வனத்துறை பாதுகாப்பு சட்டம் மற்றும் வனவிலங்கு உயிரின பாதுகாப்புச் சட்டம் ஆகியப் பிரிவிகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications