பாளையங்கோட்டையில் சட்டக்கல்லூரி மாணவர் வெட்டிக் கொலை... பதற்றம்
பாளையங்கோட்டை: பாளையங்கோட்டையில் சட்டக்கல்லூரி மாணவர் வெட்டிக்கொல்லப்பட்ட சம்பவம் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூரை சேர்ந்தவர் நம்பிராஜன், அவர் பாளையங்கோட்டை அரசு சட்ட கல்லூரியில் இறுதியாண்டு படித்து வந்தார். இன்று மதியம் அவரும் அவரது நண்பர்கள் நாராயணன் மற்றும் ஒருவர் பாளையங்கோட்டை ரயில்வே கேட் அருகில் உள்ள கடைக்கு சென்றுள்ளனர்.

காரில் சென்றவர்கள் கடையின் அருகில் காரை நிறுத்தி விட்டு இறங்கிய போது அங்கு வந்த 10 பேர் கொண்ட கும்பல் மாணவர் நம்பிராஜனை சரமாரியாக வெட்டியது தடுக்க சென்ற நாராயணனுக்கும் அரிவாள் வெட்டு விழுந்துள்ளது.

சக மாணவரின் அலறல் சப்தம் கேட்டு பொதுமக்கள் அங்கு ஓடி வர கும்பல் தப்பியோடியது, பின்னர் ரத்தவெள்ளத்தில் மிதந்த மாணவர்களை தூக்கி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்,

அங்கு சிகிட்சை பலனின்றி நம்பிராஜன் இறந்தார்,இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர் எதற்காக மாணவர் கொலை செய்யப்பட்டார்? முன் விரோதம் காரணமா? அல்லது குடும்ப பிரச்னையாஎன விசாரணை நடக்கிறது பட்டப்பகலில் மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள பகுதியில் நடந்த இச்சம்பவம் பாளையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
விஜய் வந்தால்! அதிமுக 134 தொகுதிகளில் மட்டுமே போட்டியிடும்? எடப்பாடி பழனிசாமியின் சீட் கணக்கு! -
இப்போ வேண்டாம்.. தேர்தலுக்கு பின் ஆதரவு தருகிறேன்.. சிஎம் போஸ்ட் தாங்க.. பாஜகவிடம் பேசிய விஜய்? -
திருவள்ளூர் மக்கள் ஏக்கத்துடன் பார்த்த பல ஆண்டு கனவு... ரயில் நிலையத்தில் பார்த்துமே பெரு மகிழ்ச்சி -
"இது" இல்லை என்றால் சிலிண்டர் வராது! புக்கிங் விதிகளை திடீரென மாற்றிய மத்திய அரசு! முக்கிய அறிவிப்பு -
வேலைக்கு ஆகாத டிரம்ப் பிளான்! அமெரிக்காவின் தலைமையை ஏற்க தயங்கும் உலக நாடுகள்! ஈரான் வெற்றி! -
வடிவேலுவை சினிமாவில் நுழைய விட்டதும், வளர்த்து விட்டதும் தப்பு.. ப்ளூ சட்டை மாறன் காட்டம்! பின்னணி சம்பவம் -
தவெக 6-12 தொகுதிகள் ஜெயிக்க வாய்ப்பு.. விஜய் வருகையால் அதிமுகவுக்கு பூஸ்ட்? கருத்துக்கணிப்பு ரிசல்ட் -
ஜோதிடரிடம் இருந்து வந்த மெசேஜ்.. வியூகத்தை மாற்றும் எடப்பாடி பழனிசாமி -
கிங் மேக்கர்? செக் வைத்த ’விஜய்’.. திணறும் அறிவாலயம்! - மட்ரைஸ் சர்வே சொல்லும் ‘திடுக்’ ரிப்போர்ட்! -
தங்க மழை கொட்ட போகுது.. PF வச்சு இருக்கீங்களா? சம்பள உச்சவரம்பு ₹25,000 ஆக உயருது? மாஸ் பிளான் -
தயாநிதி மாறன் கணித்த திமுகவின் 200+ ஸ்வைப்.. அப்ப வாஷ் அவுட் ஆகிவிடுமா எடப்பாடி பழனிசாமியின் அதிமுக? -
PMK Ramadoss: பாமக ராமதாஸை தைலாபுரத்தில் சந்தித்தாரா செங்கோட்டையன்? நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications