டெல்லியில் ஓடும் பேருந்தில் இருந்து விழுந்து மாணவன் பலி
டெல்லி: டெல்லியில் ஓடும் பேருந்தில் இருந்து மாணவன் தவறி விழுந்து பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தெற்கு டெல்லியின் கோவிந்தபூரி பகுதியில் அந்த விபத்து நிகழ்ந்துள்ளது. உயிரிழந்த மாணவன் பெயர் சாகர் என்பது தெரியவந்துள்ளது. 9ம் வகுப்பு படித்து வந்தான். மதியம் 1.30 மணியளவில் பள்ளியில் இருந்து அரசு பேருந்தில் வீடு திரும்பிய மாணவன் இறங்கும் முன்பாக தவறி விழுந்துவிட்டான்.
உடனடியாக அங்கிருந்தவர்கள் அருகில் இருந்த மருத்துவமனைக்கு சிறுவனை கொண்டு சென்றனர். மாணவன் உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவிக்கவே, பெற்றோர்களும், உறவினர்களும் கதறியழுதனர்.
இதனையடுத்து ஆத்திரமடைந்த உறவினர்கள் சாலைமறியலில் ஈடுபட்டனர். 10 டெல்லி போக்குவரத்துக் கழக பேருந்துகளை அடித்து நொறுக்கினர். இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. அங்கு வந்த போலீசார் சமாதானப் பேச்சுவார்த்தை நடத்தி நிலைமையை சமாளித்தனர்.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம்












Click it and Unblock the Notifications