குறைந்து வரும் வெளிநாட்டு மோகம்... தாயகம் திரும்பும் டாக்டர்கள் எண்ணிக்கை அதிகரிப்பு
பெங்களூர்: தொழில்நுட்பத் துறையைத் தொடர்ந்து தற்போது சுகாதாரத் துறையிலும் வெளிநாட்டிலிருந்து தாயகத்திற்குத் திரும்பி வருவோர் அதிகரித்து வருகின்றனராம்.
வெளிநாட்டில் வேலை பார்ப்பதை விட இந்தியாவுக்குத் திரும்பி, இங்கு பணியாற்றுவதே சிறந்தது என்ற எண்ணத்தில் வெளிநாடுகளில் வேலை பார்க்கும் பல டாக்டர்கள் கருதுவதாக தகவல்கள் கூறுகின்றன.

பலதுறை மருத்துவர்கள்....
பொது மருத்துவம், எலும்பு முறிவு சிகிச்சை நிபுணர்கள், புற்றுநோய் சிகிச்சை மருத்துவர்கள் என பலதுறை மருத்துவர்களும் தாயகம் திரும்புவதில் ஆர்வம் காட்டுவதாக இந்ததத் தகவல்கள் தெரிவிக்கி்றன.

பெங்களூரில் தான் அதிகம்....
குறிப்பாக பெங்களூரில்தான் இந்த தாயகம் திரும்பும் டாக்டர்கள் எண்ணிக்கை அதிகமாக இருப்பதாகவும் புள்ளிவிவரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

சொர்க்கமே என்றாலும்....
அமெரிக்க, கனடா, சிங்கப்பூர், ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளில் பணியாற்றும் பெங்களூர் டாக்டர்கள் பலர் நாடு திரும்புவதில் ஆர்வம் காட்டி வருகின்றனராம்.

குவியும் விண்ணப்பங்கள்....
பெங்களூரில் உள்ள பல்வேறு பிரபல மருத்துவமனைகளுக்கு சராசரியாக 8 முதல் 10 விண்ணப்பங்கள் வரை மாதந்தோறும் இந்த நாடுகளில் பணியாற்றும் இந்திய டாக்டர்களிடமிருந்து வருகிறதாம்.

இளம் மருத்துவர்கள்...
இதுகுறித்து மணிபால் மருத்துவமனையின் மருத்துவ இயக்குநர் டாக்டர் சுதர்சன் பலால் கூறுகையில், நான் வாரம் ஒருவரை இன்டர்வியூ செய்கிறேன். கடந்த 6 மாதத்தில் 12 விண்ணப்பங்கள் வந்துள்ளன. அனைவருமே 30 வயதுகளில் இருக்கும் இளம் டாக்டர்கள் ஆவர் என்றார்.

நாராயணா நகரிலும்....
இதேபோல நாராயண சுகாதார நகரில் உள்ள ஸ்பார்ஷ் மருத்துவமனையிலும் வெளிநாட்டில் பணியாற்றும் பல இந்திய டாக்டர்கள் அதிக அளவில் விண்ணப்பிக்கின்றனராம். மாதந்தோறும் தங்களுக்கு இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, அமெரிக்கவிலிருந்து ச ராசரியாக 10 விண்ணப்பங்கள் வருவதாக இந்த மருத்துவமனை கூறுகிறது.

இந்தியாவிலேயே அதிக வாய்ப்புகள்...
இதுகுறித்து டாக்டர் பாட்டீல் என்பவர் கூறுகையில், 20 வருடங்களுக்கு முன்பு நிறைய இந்திய டாக்டர்கள் வெளிநாடுகளுக்குச் சென்றனர். அப்போது இங்கு அவர்களுக்கு வாய்ப்புகள் குறைவாக இருந்தது. ஆனால் இன்று அப்படி இல்லை. நிறைய வாய்ப்புகள், நிறைய மருத்துவமனைகள், நிறைய வசதிகள் உள்ளன.

அதிக ஆர்வம்....
எனவேதான் நிறைய டாக்டர்கள் தற்போது தாயகத்திலேயே பணியாற்ற ஆர்வம் காட்டுகின்றனர் என்றார். பாட்டீல் 5 ஆண்டுகள் இங்கிலாந்தில் பணியாற்றியவர் ஆவார்.

40ல் 10 பேர்.....
ஸ்பார்ஷ் மருத்துவமனையில் பணியாற்றும் 40 ஆர்த்தோபீடிக்ஸ் மருத்துவர்களில் 10 பேர் வெளிநாடுகளிலிருந்து திரும்பியவர்கள் ஆவர்.

கடந்த ஐந்தாண்டுகளாகத்தான்....
கடந்த ஐந்து ஆண்டுகளில்தான் இப்படி தாயகம் திரும்பும் டாக்டர்களின் எண்ணிக்கை அதிகரிக்க ஆரம்பித்துள்ளதாம்.

புற்றுநோய் கிசிச்சை....
புற்றுநோய் மருத்துவ நிபுணர்களுக்கு இந்தியாவில் தற்போது நில்ல கிராக்கி உள்ளது. காரணம், இந்தியாவில் புற்றுநோய்த் தாக்குதல் அதிகரித்து வருவதால். எனவே அத்துறை டாக்டர்கள் பலர் இந்தியாவுக்குத் திரும்புவதில் ஆர்வம் காட்டுகின்றனராம்.

ஆய்வுப்பணிக்கான களம்....
மேற்கத்திய நாடுகள் பலவற்றில் டெங்கு, டிபி, மலேரியா போன்றவை இல்லை. ஆனால் இந்தியாவில் இவை அதிகமாகவே உள்ளன. எனவே இந்தியாவில் பணியாற்றுவதால் இந்த நோய் ஒழிப்பு மற்றும் ஆய்வுப் பணிகளுக்கு இந்தியாவே பொருத்தமானது என்று இளம் டாக்டர்கள் பலர் கருதுவதால் தாயகம் திரும்பஆர்வம் காட்டுகின்றனராம்.

குறையும் வெளிநாட்டு மோகம்....
தொழில்நுட்பத் துறையினரைப் போலவே தற்போது மருத்துவர்கள் மத்தியிலும் வெளிநாட்டுப் பணி என்ற கனவு போய் விட்டது. இனிமேலும் வெளிநாட்டு மோகத்தில் டாக்டர்கள் யாரும் இருக்க மாட்டார்கள் என்று இங்குள்ள மருத்துவர்கள் நம்பிக்கையுடன் கூறுகின்றனர். இதைத்தான் அவர்கள் திரும்பிவருவது காட்டுவதாகவும் அவர்கள் கூறுகிறார்கள்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications