2 கள்ளக்காதல்... 2 பேரை அடுத்தடுத்துக் கொலை செய்த 4 பேர் கைது
புளியங்குடி: நெல்லை மாவட்டம் வாசுதேவநல்லூர் அருகே இரு வேறு கள்ளக்காதல்களில் 2 பேர் அடுத்தடுத்துக் கொலை செய்யப்பட்டு ஒரே பகுதியில் புதைத்தும், எரிக்கவும் செய்யப்பட்டுள்ளனர். இதுதொடர்பாக நான்கு பேரை போலீஸார் கைது செய்துள்ளனர்.
கொல்லப்பட்டவர்களில் ஒருவர் வழக்கறிஞர் ஆவார். இந்தக் கொலை வழக்கில் 2 பேர் தலைமறைவாக உள்ளனர். அவர்களைப் போலீஸார் தேடி வருகின்றனர்.
கோட்டையூர் கருப்பசாமி
வாசுதேவநல்லூர் அருகே உள்ள கோட்டையூர் பசும்பொன் 1வது தெருவை சேர்நதவர் கருப்பசாமி. இவருக்கு குடி பழக்கம் இருந்ததால் இவருக்கும், இவரது மனைவி மகேஸ்வரி என்பவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.
இந்நிலையி்ல் மகேஸ்வரிக்கும் வாசுதேவநல்லூர் மஞ்சணத்தி கிணற்று தெருவை சேர்ந்த மாரியப்பனுடன் பழக்கம் ஏற்பட்டு கள்ள காதலாக மாறியது. இது கருப்பசாமிக்கு தெரிய வர மனைவியை கண்டித்தார்.
இந்நிலையில் கருப்பசாமி கடந்த 21.4.2013 அன்று முதல் காணவில்லை. இருப்பினும் கருப்பசாமி மாயம் குறித்து யாரும் போலீசில் புகார் செய்யவில்லை.
ராமையா தெரு ரவிக்குமார்
இதே போல் வாசுதேவநல்லூர் ராமையா தெருவை சேர்ந்தவர் வழக்கறிஞர் ரவிக்குமார். திருமணமான இவருக்கும், மனைவிக்கும் இடையே கருத்து வேறுபாடு இருந்துள்ளது.
ரவிக்குமார் நெல் அறுவடை இயந்திரம் வைத்து தொழில் செய்து வந்தார். கடந்த 31.7.2013ல் தந்தை வெள்ளைபாண்டியிடம் அறுவடை சம்பந்தமாக திருத்தணி செல்வதாக கூறி சென்றவர் பின்னர் வீடு திரும்பவில்லை. இதுகுறித்து வெள்ளைபாண்டி தனது மகனை காணவி்ல்லை என வாசுதேவநல்லூர் போலீசில் நிலையத்தில் புகார் செய்தார்.
போலீசார் வழக்கு பதிந்து வக்கீல் ரவிகுமாரை தேடி வந்தனர். இந்நிலையில் வாசுதேவநல்லூர் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் சில மாதங்களுக்கு முன் ஒருவர் கொலை செய்யப்பட்டு புதைக்கப்பட்டதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
கருப்பசாமி பிணம் கண்டுபிடிப்பு
இது தொடர்பான விசாரணையில் காணாமல் போன கருப்பசாமி மனைவி மகேஸ்வரியும், அவரது காதலன் மாரிச்சாமியும் சேர்ந்து கொலை செய்தது தெரிய வந்தது. இருவரும் சேர்ந்து வாசுதேவநல்லூர் களஞ்சியம் தெருவை சேர்ந்த பொன்ராஜ், மகேஸ்வரியின் தந்தை வீரப்பன் ஆகியோர் உதவியுடன் கருப்பசாமியை வாசுதேவநல்லுர் காட்டு பகுதிக்கு அழைத்து சென்று மது வாங்கி கொடுத்துள்ளனர். பின்னர் அவரது கழுத்தை நெரித்து கொன்று அங்கேயே புதைத்துள்ளனர்.
ரவிக்குமாரையும் கொன்று புதைத்தனர்
கைதானவர்களிடம் நடத்திய விசாரணையில் வக்கீல் ரவிக்குமார் கள்ளக்காதல் விவகாரத்தில் எரித்து கொல்லப்பட்டதும், அதையும் மாரிச்சாமியே செய்ததும் தெரிய வந்தது.
ரவிக்குமாருக்கும், வாசுதேவநல்லூரை சேர்ந்த செல்லத்துரை மனைவி முத்துலெட்சுமிக்கும் கள்ள தொடர்பு இருந்துளளது. இந்த விவகாரம் செல்லத்துரைக்கு் தெரிய வரவே அவர் மனைவியை கண்டித்துள்ளார்.
இருப்பினும் இவர்களது தொடர்பு நீடித்தது. செல்லத்துரை மணல் புரோக்கர் மாரிச்சாமியை சந்தித்து பிரச்சனையை தெரிவித்துள்ளார். இவர்கள் இருவரும் சேர்ந்து கருப்பசாமியை கொலை செய்த அதே காட்டுபபகுதிக்கு அழைத்து சென்று பின்னந்தலையில் கம்பால் தாக்கியதில் அவர் மயங்கி விழுந்தார்.
பின்னர் அவரை தூக்கி சென்று உடலில் மண்எண்ணெய் ஊற்றி எரித்துள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக மாரிச்சாமி உள்ளிட்ட 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.2 பேர் தலைமறைவாகி விட்டனர். அவர்களைப் போலீஸார் தேடி வருகின்றனர்.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications