சேலம் திமுக பிரமுகர் கொலை- 5 பேரிடம் விசாரணை
சேலம்: சேலம் மகுடஞ்சாவடி திமுக பிரமுகர் கொலை வழக்கு தொடர்பாக ஐந்து பேரிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
மகுடஞ்சாவடியை அடுத்த இளம்பிள்ளை காந்தி நகர் பகுதியை சேர்ந்தவர் கோபாலகிருஷ்ணன் (52). ஜவுளி தொழில் அதிபர். மேலும் இளம்பிள்ளை பேரூர் 14-வது வார்டு தி.மு.க. கிளை செயலாளராகவும் உள்ளார். இவருக்கு மாலினி (51) என்ற மனைவியும், முரளி கிருஷ்ணன் (25), ஜெயப்பிரகாஷ் (19) ஆகிய 2 மகன்களும் உள்ளனர்.
கோபாலகிருஷ்ணன் திங்களன்று மதியம் 1 மணியளவில் வீட்டின் மாடியில் 5 பேர் கொண்ட கும்பலால் வெட்டி கொலை செய்யப்பட்டார். மேலும் வீட்டில் இருந்த ரூ. 3 லட்சம் பணம், 50 பவுன் நகை, ஒரு கிலோ வெள்ளி பொருட்களையும் கொள்ளையடித்து சென்று விட்டனர். பிணத்தை கைப்பற்றி இந்த சம்பவம் குறித்து மகுடஞ்சாவடி போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.
இந்நிலையில் போலீசார் சந்தேகத்தின் பேரில் கோபால கிருஷ்ணனின் ஜவுளி கடையில் வேலைப்பார்க்கும் தியாகராஜன் என்பவரது மகன்கள் சபரிநாதன், லட்சுமணன், மற்றும் தாரமங்கலம் பகுதியை சேர்ந்த பழனிசாமி, அருண், சங்கர் ஆகியோரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்!












Click it and Unblock the Notifications