ராஜபாளையத்தில் மனைவி நல தின வேள்வி... மனைவியருக்கு கணவர்கள் மரியாதை
ராஜபாளையம்: விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில் நடந்த மனைவிக்கு மரியாதை செலுத்தும் நிகழ்ச்சியில் கணவன்மார்கள் தங்கள் மனைவிகளை மனதார ஆசிர்வாதம் செய்தனர்.
மனைவியரை அமர வைத்து கணவர்கள் மரியாதை செய்தது பார்க்கவே கண்கொள்ளாக் காட்சியாக அமைந்திருந்தது. பெரும் திரளான தம்பதியர் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில் உள்ள மனவளக்கலை மன்றம் வேதாத்திரி மகரிஷி அறிவுத் திருக்கோயிலில் மனைவி நல தின வேள்வி நடந்தது. இதில் ஏராளமான தம்பதியர் கலந்து கொண்டனர்.

வாழ்வில் இன்ப துன்பங்கள், ஏற்றம் இறக்கங்கள், நன்மை தீமைகளை மனதார ஏற்று இல்லறத்தில் இணைந்த தம்பதிகள் ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்து வாழ கற்றுக் கொள்ள வேண்டும் என தம்பதிகளுக்கு அறிவுரைகள் வழங்கப்பட்டது.
நிகழ்ச்சியில் கலந்து கொண்ட கணவன்கள், தங்கள் மனைவிகளை மனதார ஆசிர்வதித்தனர். மலர்கள் கொடுத்து மகிழ்ந்தனர். அதே போல மனைவிகளும் கணவன்களை வாழ்த்தி அவர்களுக்கு பரிசுகள் கொடுத்தனர்.
இந்த நிகழ்ச்சிக்கு அறிவுத் திருக்கோயில் டிரஸ்டி காசி விஸ்வநாதராஜா தலைமை வகித்தார். பேராசிரியை ராஜம் முன்னிலை வகித்தார். நகராட்சி முன்னாள் தலைவர் மகாலட்சுமி சங்கரராஜா, பெண்ணின் பெருமை குறித்து கணேசன் பேசினார். அறிவுத் திருக்கோயில் மவுனகுரு தர்மலிங்கம் உள்ளிட்டோர் ஏற்பாடுகளை செய்தனர்
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications