முக்கிய ஹிஸ்புல் முஜாஹிதீன் தீவிரவாதி ஜம்மு காஷ்மீரில் கைது
Subscribe to Oneindia Tamil
ஸ்ரீநகர்: ஹிஸ்புல் முஜாஹிதீன் இயக்கத்தின் முக்கியத் தீவிரவாதியான தலிப் லலி என்பவன் ஜம்மு காஷ்மீர் மாநிலம் பந்திப்பூர் மாவட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளான்.
அவன் உள்பட மேலும் 2 பேரையும் பாதுகாப்புப் படையினர் கைது செய்துள்ளனர். தலிப் ஹிஸ்புல் இயக்கத்தின் முக்கியத் தளபதி என்று கூறப்படுகிறது.
தலிப் லலி, பந்திப்பூர் மாவட்டம் மர்கிகுல் என்ற பகுதியைச் சேர்ந்தவன் ஆவான். காஷ்மீர் பள்ளத்தாக்குப் பகுதியில் நீண்ட காலமாக இவன் செயல்பட்டு வந்துள்ளான். பாகிஸ்தான் எல்லைக்குள் அடிக்கடி போய் வருபவனும் கூட.
பாகிஸ்தானைச் சேர்ந்த பல தீவிரவாத அமைப்புகளுடன் இவனுக்குத் தொடர்பு உள்ளதாம். 41 வயதான லலி தவிர வசீம் மற்றும் அபு உமர் ஆகிய இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.












Click it and Unblock the Notifications