சென்னையில் பகலில் வெயில்… இரவில் சூறை காற்றுடன் கனமழை
சென்னை: சென்னையில் நேற்று பகல் முழுவதும் வெயில் சுட்டெரித்த நிலையில் இரவு நேரத்தில் சூறைக்காற்றுடன் கனமழை கொட்டி குளிர்ச்சியை ஏற்படுத்தியது.
இலங்கையின் மேல் அடுக்கில் வளிமண்டலத்தில் ஏற்பட்ட சுழற்சி காரணமாக, கடந்த சில நாட்களாக தமிழகத்தின் தென் மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. ஆனால், கடலோர மாவட்டங்களில் எதிர்பார்த்த மழை இல்லை. இந்த நிலையில் நேற்று இரவு சென்னையில் திடீரென மழை கொட்டியது. காலை முதலே அக்னி நட்சத்திரம் போல வெயில் சுட்டெரித்தது.
இந்த நிலையில் இரவு நேரத்தில் லேசான குளிர் காற்று பரவியது. பின்னர் 10 மணிக்கு மேல் திடீரென சூறை காற்றுடன் இடி-மின்னலோடு மழை பெய்தது.

மழையோடு காற்றும் அதிகம் வீசியதால், சாலையில் வாகனங்களில் சென்றவர்கள் கடும் சிரமத்திற்கு மத்தியிலேயே சென்றனர்.
சூறை காற்றுக்கு ஒரு சில பகுதிகளில் வைக்கப்பட்டிருந்த விளம்பர போர்டுகள் கீழே விழுந்தன. இதனால், அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து தடைபட்டது.
மயிலாப்பூர், மந்தைவெளி, புரசைவாக்கம், கீழ்ப்பாக்கம், கோயம்பேடு, பெரம்பூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கனமழை கொட்டியது. சாலைகளில் வெள்ளநீர் தேங்கியதால் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்குள்ளாகினர்.
காலையில் அடித்த வெயிலுக்கு இரவில் பெய்த மழையால் குளிர்ச்சி பரவியதால் சென்னை வாசிகள் மகிழ்ச்சியடைந்தனர்.
-
தமிழகத்தில் இன்று 21 மாவட்டங்களில் கனமழை வெளுக்கும்.. சென்னைக்கும் அலர்ட் விடுத்த வானிலை ஆய்வு மையம் -
கருணை காட்டுவாரா வருண பகவான்.. சென்னை, செங்கல்பட்டில் சட்டென மாறிய வானிலை -
இன்னும் 3 நாள் தான்.. வரப் போகுது தென்மேற்குப் பருவமழை! ஜில்ஜில் கிளைமேட்டுக்கு ரெடியாகுங்க மக்களே! -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்!












Click it and Unblock the Notifications