ரூ200 லஞ்சம்... 19 ஆண்டுக்குப் பிறகு சிறை தண்டனை 'வாங்கிய' பில் கலெக்டர்
பெங்களூர்: கர்நாடகாவில் கிராம பஞ்சாயத்து பில் கலெக்டர் ஒருவர் 19 ஆண்டுகளுக்கு முன்பு ரூ200 லஞ்சம் வாங்கிய வழக்கில் தற்போது சிறைத் தண்டனையை அனுபவிக்கிறார்.
நிலப் பட்டா தொடர்பான ஆவணங்களில் மாற்றம் செய்வதற்காக கே.ஆர். புரம் அருகே உள்ள ஹோரமவு கிராம பஞ்சாயத்தைச் சேர்ந்த சந்திரசேகர் என்ற பில் கல்கெடர் ரூ200 லஞ்சம் வாங்கியதாக 1994 ஆம் ஆண்டு செப்டம்பர் 19 -ந் தேதி கையும் களவுமாக சிக்கினார். லோக் ஆயுக்தா போலீசில் சிக்கிய அவர் தாம் லஞ்சம் வாங்கியதையும் ஒப்புக் கொண்டார்.
இது தொடர்பான வழக்கில் 2000 ஆம் ஆண்டு அவருக்கு 6 மாத தண்டனையும் ரூ1000 அபராதமும் விதிக்கப்பட்டது. இதை எதிர்த்து கர்நாடகா உயர்நீதிமன்றத்தில் அவர் மேல்முறையீடு செய்திருந்தார். கீழ் நீதிமன்றம் விதித்த தீர்ப்பை உயர்நீதிமன்றம் உறுதி செய்தது. ஆனால் சந்திரசேகரோ தலைமறைவாகிப் போய்விட்டார். இந்த நிலையில்தான் நேற்று லோக் ஆயுக்தா போலீசிடம் சந்திரசேகர் வசமாக சிக்கியிருக்கிறார்.
இதைத் தொடர்ந்து லோக் ஆயுக்தா சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அவர் 6 மாத தண்டனைக்காக சிறைக்கு அனுப்பி வைக்கப்பட்டிருக்கிறார்.












Click it and Unblock the Notifications