சிறையில் இருந்து தப்பிய காமக்கொடூரன் ஜெய்சங்கரை பிடிக்க தீவிர வேட்டை

இதனால் மதானி ஆதரவாளர்களுடன் அவன் சேர்ந்திருப்பானோ என்ற சந்தேகமும் பெங்களூர் போலீஸாருக்கு எழுந்துள்ளதாம்.
பெங்களூர் அருகே உள்ள பரப்பன அக்ரஹாரா சிறையிலிருந்து பலத்த காவலுக்கு மத்தியில் ஜெய்சங்கர் தப்பிஓடி விட்டான். அவன் மீது ஏகப்பட்ட கற்பழிப்பு மற்றும் கொலை வழக்குகள் உள்ளன.
அவன் தப்பியது தொடர்பாக பல்வேறு தகவல்கள் வெளியாகி வருகின்றன. அவனைப் பிடிக்க தீவிர வேட்டை நடந்து வருகிறது. சொந்த ஊரான சேலம் மாவட்டம் கன்னியாம்பட்டியிலும் போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் ஜெய்சங்கர் பற்றி திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன. கர்நாடக சிறையில் இருந்த போது அங்கு வெடிகுண்டு வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட கேரளாவைச் சேர்ந்த மதானியிடம் ஜெய்சங்கர் நட்புடன் பழகினான்.
மதானிக்கு பார்வையாளர்கள் கொண்டு வரும் உணவு பொருட்களில் பெரும் பகுதி ஜெய்சங்கருக்கு வழங்கப்பட்டது. இதனால் அவன் நன்றாக சாப்பிட்டு கட்டுமஸ்தாக இருந்தான். அவரின் அன்புக்கும் பாத்திரமாக திகழ்ந்துள்ளான்.
எனவே மதானி தரப்பில் ஜெய்சங்கர் தப்பியோட உதவிகள் கிடைத்திருக்கலாமோ என்ற சந்தேகம் போலீஸாருக்கு எழுந்துள்ளதாம்.












Click it and Unblock the Notifications