6 மாதங்களில் 10 பெண்களை சீரழித்த சக்தி மில் கற்பழிப்புக் கும்பல்!

Subscribe to Oneindia Tamil

மும்பை: மும்பை சக்தி மில்லில் பாலியல் பலாத்காரம் செய்து சிக்கிய கும்பலைச் சேர்ந்த ஐந்து பேரும் கடந்த 6 மாதத்தில் 10 பெண்களை பாலியல் பலாத்காரம் செய்த பரபரப்புத் தகவல் வெளியாகியுள்ளது.

அதே இடத்தில்தான் இந்த அக்கிரமங்களை இவர்கள் தொடர்ந்து செய்து வந்துள்ளனர்.

முன்னதாக இவர்கள் நான்கு பேர் வரை பலாத்காரம் செய்திருக்கலாம் என சந்தேகிக்கப்பட்டது. ஆனால் தற்போது 10 பேரை இவர்கள் நாசப்படுத்தியிருப்பது தெரிய வந்துள்ளதாக காவல்துறையினர் கூறுகின்றனர்.

கற்பழிப்புக் கூடமாக மாறிய சக்தி மில்

கற்பழிப்புக் கூடமாக மாறிய சக்தி மில்

சக்தி மில்லை இந்தக் கும்பல் பலாத்காரம் செய்யும் கூடம் போல பயன்படுத்தி வந்துள்ளது. இந்தக் கும்பலில் இந்த ஐந்து பேரைத் தவிர மேலும் பலர் இருக்கலாம் என்றும் போலீஸார் சந்தேகிக்கின்றனர்.

2வது பெண்ணின் வாக்குமூலம்

2வது பெண்ணின் வாக்குமூலம்

சக்தி மில் பகுதியில் பாலியல் பலாத்காரத்துக்குள்ளான 2வது பெண் கொடுத்த வாக்குமூலத்தில் மேலும் இருவர் குறித்த தகவலைத் தெரிவித்துள்ளார். அதில் ஒரு நபரை போலீஸார் பிடித்துள்ளதாக தெரிகிறது. இன்னொரு நபருக்கு வலை வீசப்பட்டுள்ளது.

பாதிக்கப்பட்ட பெண்கள் முன்வர வேண்டும்

பாதிக்கப்பட்ட பெண்கள் முன்வர வேண்டும்

சக்தி மில் பாலியல் பலாத்கார சம்பவத்தில் பெண் பத்திரிக்கையாளர் மற்றும் இன்னொரு பெண் மட்டுமே முன்வந்து புகார் தெரிவித்துள்ளனர். இதே போல பாதிக்கப்பட்ட பிற பெண்களும் வந்தால் இந்த மிகப் பெரிய சதித் செயலின் பின்னால் உள்ள அத்தனைக் குற்றவாளிகளையும் பிடிக்க முடியும் என போலீஸார் கருதுகின்றனர்.

ஐந்து பேரிடம் நடத்திய விசாரணையில்

ஐந்து பேரிடம் நடத்திய விசாரணையில்

சிக்கிய ஐந்து குற்றவாளிகளும் கொடுத்த தகவல்களின்படி இதுவரை அவர்கள் 10 பேரை பலாத்காரம் செய்திருப்பது உறுதியாகியுள்ளதாக விசாரணை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

தனியாக ஒதுங்கிய ஜோடியை மிரட்டி

தனியாக ஒதுங்கிய ஜோடியை மிரட்டி

இந்தக் கும்பல் முதலில் தனியாக இருக்க விரும்பி இந்த மில் பக்கம் ஒதுங்கிய ஒரு ஜோடியை பிடித்துள்ளது. அந்த நபரை மிரட்டி பெண்ணை பலாத்காரம் செய்துள்ளனர்.

குப்பை பொறுக்கும் பெண்ணை...

குப்பை பொறுக்கும் பெண்ணை...

சில வாரங்கள் கழித்து அந்தப் பகுதியில் குப்பை பொறுக்க வந்த பெண்ணை சீரழித்துள்ளனர்.

விபச்சாரப் பெண்ணையும்

விபச்சாரப் பெண்ணையும்

அதேபோல சில நாட்கள் கழித்து ஒரு விபச்சாரப் பெண்ணைக் கூட்டி வந்துள்ளனர். அவரிடம் இன்பம் அனுபவித்து விட்டு காசு கொடுக்காமல் விரட்டி விட்டனர்.

போலீஸ் என்று மிரட்டி

போலீஸ் என்று மிரட்டி

கடந்த மார்ச் மாதம் இந்தப் பக்கமாக நடந்து போன ஒரு பெண்ணை, தாங்கள் போலீஸ் என்று மிரட்டி தனியான இடத்திற்குக் கூட்டிக் கொண்டு போய் பலாத்காரம் செய்துள்னர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+