தெலுங்கானாவுக்கு எதிராக போராட்டம்.. வெறிச்சோடும் திருப்பதி!! 'வருவாய்' பெரும் சரிவு!!
திருப்பதி: தெலுங்கானாவுக்கு எதிராக சீமாந்திராவில் ஒரு மாத காலத்துக்கும் மேலாக போராட்டம் நீடித்து வரும் நிலையில் திருப்பதியிலும் பக்தர்கள் கூட்டம் கணிசமாக குறைந்துவிட்டது. இதனால் திருப்பதி கோயில் வருவாய் பாதிக்கப்பட்டிருக்கிறது.
தெலுங்கானாவுக்கு எதிராக கடலோர ஆந்திரா, ராயலசீமா ஆகியவற்றை உள்ளடக்கிய சீமாந்திராவில் தொடர் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.

திருப்பதி போக்குவரத்து பாதிப்பு
இத்தகைய போராட்டங்களால் திருப்பதி திருமலைக்கான போக்குவாரத்தும் கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கிறது. தனியார் வாகனங்களும் போதுமான பாதுகாப்பற்ற சூழலில் இயக்குவதை நிறுத்தி வைத்துள்ளனர்.

பொது தரிசனத்துக்கு 5 மணி நேரம்
கூட்டம் குறைவாக இருப்பதால் திருப்பதியில் பொது தரிசனத்தில் சாமி தரிசனம் செய்ய 5 மணி நேரம் இருந்தால் போதுமானது,

சிறப்பு தரிசனத்தில் 2 மணி நேரம்
அத்துடன் பாத யாத்திரை மற்றும் சிறப்பு கட்டண தரிசனத்துக்கு வருவோர் 2 மணி நேரத்திலும் சாமி தரிசனம் செய்துவிட்டு திரும்புகின்றனர்.

கூட்டமே இல்லையே..
மேலும் திருப்பதியில் முடி காணிக்கை, பிரசாத மையம், அன்னதானக் கூடம் போன்ற இடங்களிலும் கூட வழக்கமாக காணப்படும் நெருக்கடியான நீண்ட வரிசைகளை தொடர்ந்தும் காண முடிவதில்லை.

வருவாய் 36% சரிவு
இப்படி தொடரும் போராட்டங்களாலும் பக்தர்கள் வருகை குறைவாலும் திருப்பதி கோயில் வருமானம் நாளொன்றுக்கு 36% அளவுக்கு வீழ்ச்சியடைந்து வருகிறது. உலகிலேயே அதிக வருவாய் ஈட்டக் கூடிய திருப்பதி ஏழுமலையானுக்கே இப்படி வரும்படி குறைந்துவிட்டதே!!












Click it and Unblock the Notifications