விலை சரிவு: ஆன்லைனில் கிலோ ரூ.9க்கு விற்பனையாகும் வெங்காயம்
டெல்லி: ஆன்லைனில் ரூ.9க்கு வெங்காயம் விற்பனை செய்வதாக டெல்லியைச் சேர்ந்த நிறுவனம் அறிவித்துள்ளது.
கடந்த மாதம் டெல்லி உள்பட நாடு முழுவதும் வெங்காயம் விலை உயர்ந்து கிலோ ரூ.80க்கு விற்பனையானது. இதனால் ஏழை, நடுத்தர வர்க்கத்தினர் பாதிக்கப்பட்டனர். பல்வேறு அரசியல் கட்சிகள் வெங்காயம் விலை உயர்வை கண்டித்து போராட்டம் நடத்தின.
இதையடுத்து மத்திய அரசு வெங்காயம் ஏற்றுமதிக்கு தடை விதித்ததுடன் வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்ய அனுமதித்தது. இதனால் அதிக அளவில் வெங்காயம் இறக்குமதியாகிறது. இதனால் நாடு முழுவதும் வெங்காயம் விலை கட்டுக்குள் இருக்கிறது. கிலோ ரூ.40க்கு விற்கப்படுகிறது.

வியாபாரிகள் கண்ணீர்
இறக்குமதி அதிகரித்து உள்நாட்டில் உற்பத்தியான வெங்காயமும் குவிந்து கிடப்பதால் விலை மேலும் சரியும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் வெங்காயம் உரிக்காமலேயே மொத்த வியாபாரிகளை கண்ணீர்வர வழைக்கச் செய்துள்ளது.

ஆன்லைனில் விற்பனை
வெங்காயம் அழுகும் பொருள் என்பதால் நீண்ட நாள் சேமித்து வைக்க முடியாது. இதையடுத்து டெல்லியைச் சேர்ந்த மொத்த விற்பனையாளர் ஒருவர் ஆன்லைன் மூலம் கிலோ ரூ.9க்கு வெங்காயம் விற்பனை செய்ய முடிவு செய்துள்ளார். இதற்காக ‘குரூப் ஆன் இந்தியா' என்ற ‘ஆன் லைன்' நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்துள்ளார்.

கிலோ ரூ.9க்கு
குரூப் ஆன் இந்தியா நிறுவனம் இணையதள ஆன்லைன் மூலம் நாடு முழுவதும் அனைத்து உபயோக பொருட்களையும் விற்பனை செய்து வருகிறது. இனி அந்த நிறுவனம் வெங் காயத்தையும் விற்பனை செய்கிறது. இணையதளத்தில் இந்த நிறுவனத்தை தொடர்பு கொண்டால் ரூ.9க்கு வெங்காயம் கிடைக்கும்.

டோர் டெலிவரி
அடுத்த 7 நாட்களுக்கு மட்டும் நாடு முழுவதும் 78 நகரங்களில் கிடைக்கும் என்றும், தேவைப்படுவோருக்கு ‘டோர் டெலிவரி' செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

கெட்டுப் போகாது
வெங்காயம் கெட்டுப்போகாமல் இருக்க விசேஷமாக பாக்கெட்டில் அடைத்து வைக்கப்படும். இணையதளம் மூலம் மட்டுமே விற்பனை செய்யப்படும். ஆன்லைனில் வெங்காயம் ‘புக்' செய்பவர்களுக்கு டெலிவரி பாய்கள் மூலம் சப்ளை செய்யப்படும்.

3000 கிலோ வெங்காயம்
முதலில் 10 நாட்களுக்கு விற்பனை செய்யப்படும். அதன் பிறகு ஸ்டாக் தீரும் வரை விற்பனை நீடிக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. ஆன்லைன் மூலம் இந்த நிறுவனம் நாள் ஒன்றுக்கு 3000 கிலோ வெங்காயம் விற்பனை செய்ய திட்டமிட்டுள்ளது. இவ்வாறு குரூப் ஆன் இந்தியா நிறுவன அதிகாரி தெரிவித்தார்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications