6 வயது சிறுமிக்கு குற்றவாளியின் 8 வயது மகனோடு திருமணம் : பஞ்சாயத்தார் அதிரடி தீர்ப்பு
ஜெய்ப்பூர்: ஜெய்ப்பூரில் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட 6 வயது சிறுமியை, குற்றவாளியின் 8 வயது மகனுக்கே திருமணம் செய்து வைக்குமாறு தீர்ப்பளித்த ஊர் பஞ்சாயத்தார் மற்றும் குற்றவாளி கைது செய்யப்பட்டுள்ளனர்.
ஜெய்ப்பூரில் இருந்து 250 கி.மீ. தூரத்தில் உள்ளது கேஷவ்புரா பகுதி. அப்பகுதியில் வசித்து வரும் ஏற்கனவே மணமான 40 வயது ஆண் ஒருவர், பக்கத்து வீட்டில் வசித்து வந்த 6 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.
ஆனால், நடந்த சம்பவம் பற்றி போலீசில் தகவல் தெரிவிக்காத ஊரார், பஞ்சாயத்தைக் கூட்டி சிறுமியை பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்திய குற்றவாளியின் 8 வயது மகனுக்கு திருமணம் செய்துவைத்து விடும்படி தீர்ப்பளித்துள்ளனர்.
ஆனால், ஊர் பஞ்சாயத்தின் தீர்ப்பை அச்சிறுமியின் பெற்றோர் ஏற்றுக் கொள்ள மறுத்துவிட்டனராம். இதனை தனக்கு சாதமாகப் பயன் படுத்திக் கொண்ட குற்றவாளி, மீண்டும் ஒருமுறை அச்சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.
பஞ்சாயத்தாரின் தீர்ப்பு, சிறுமிக்கு நேர்ந்த கொடுமை பற்றி தகவல் அறிந்த சமூக ஆர்வலர்கள் சிலர், சிறுமியின் பெற்றோரை மகாவீர் காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று புகார் அளிக்க உதவி செய்தனர்.
சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில் பஞ்சாயத்து உறுப்பினர்கள் மீதும் சிறுமியை பாலியல் கொடுமைக்கு உட்படுத்திய நபர் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டு, குற்றவாளிகள் தற்போது கைது செய்யப்பட்டுள்ளனர்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications