சிறையில் இருந்து தப்பிய காமக்கொடூரன், சைக்கோ ஜெய்சங்கர் இன்று பெங்களூரில் கைது

பல்வேறு கொலை மற்றும் கற்பழிப்பு வழக்குகளில் சேலத்தைச் சேர்ந்த ஜெய்சங்கர்(36) கைது செய்யப்பட்டான். அவன் கடந்த 2011ம் ஆண்டு மே மாதம் 5ம் தேதி பெங்களூரில் உள்ள பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டான். இந்நிலையில் அவன் கடந்த 1ம் தேதி அதிகாலை சிறையில் இருந்து தப்பியோடிவிட்டான்.
இதையடுத்து போலீசார் அவனை கர்நாடகம், தமிழகம், ஆந்திரா, கேரளா மற்றும் மகராஷ்டிராவில் தேடி வந்தனர். மேலும் அவனைப் பற்றி தகவல் கொடுப்பவர்களுக்கு ரூ.5 லட்சம் பரிசும் அறிவிக்கப்பட்டது. பெங்களூரில் உள்ள பெண்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டனர். முன்னதாக ஜெய்சங்கரை பிடாதி அருகே பார்த்ததாக டிரக் டிரைவர் ஒருவர் போலீசில் தெரிவித்தார்.
இந்நிலையில் அவன் பரப்பன அக்ரஹாரா சிறைக்கு அருகே உள்ள ஓசூர் ரோட்டில் வைத்து இன்று கைது செய்யப்பட்டான். அவனை தப்பிச் செல்ல சிறையில் உள்ள யாரோ தான் உதவி செய்தார்கள் என்று கூறப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications