ஜெ. சொத்துக் குவிப்பு வழக்கு. புதிய அரசு வழக்கறிஞரை நியமிக்க சுப்ரீம் கோர்ட் அனுமதி!
டெல்லி: தமிழக முதல்வர் ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு வழக்கில் புதிய அரசு வழக்கறிஞரை கர்நாடகா உயர்நீதிமன்றத்துடன் ஆலோசித்து நியமிக்க கர்நாடகாவுக்கு உச்சநீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. அதே நேரத்தில் ஏற்கெனவே இருந்த அரசு வழக்கறிஞர் பவானிசிங்கை நீக்கி பிறப்பித்த உத்தரவை கர்நாடகா இன்று திரும்பப் பெற்றதாகவும் உச்சநீதிமன்றத்தில் தெரிவித்தது.
1991-96 ஆம் ஆண்டு காலத்தில் தமிழக முதல்வராக ஜெயலலிதா பதவி வகித்த போது வருமானத்துக்கு அதிகமாக சொத்துக் குவித்தார் என்பது வழக்கு. இந்த வழக்கு இறுதிக் கட்டத்தை எட்டிய நிலையில் அரசு வழக்கறிஞர் பவானிசிங்கை நீக்க திமுக தரப்பு கோரியது. இதையடுத்து பவானிசிங்கை கர்நாடகா அரசு திரும்பப் பெற்றது.
தமது வழக்கில் அரசு வழக்கறிஞர் பவானிசிங்கை நீக்கியதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் ஜெயலலிதா மனுத்தாக்கல் செய்தார். இந்த மனு மீதான விசாரணையின் போது கர்நாடகா உயர்நீதிமன்றம், மாநில அரசு பரிந்துரைத்த அரசு அழக்கறிஞர்கள் பட்டியலில் பவானிசிங் இல்லை என்றும் அவர் மீது ஏராளமான குற்றச்சாட்டுகள் இருந்தன என்றும் கூறப்பட்டது.

இதைத் தொடர்ந்து பவானிசிங் நியமனம், நீக்கம் தொடர்பான அறிக்கைகளை தாக்கல் செய்ய கர்நாடகாவுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இன்று இந்த வழக்கின் விசாரணை நடைபெற்றது.,
இந்த விசாரணையின் போது பவானிசிங்கை வாபஸ் பெற்று பிறப்பித்த உத்தரவை கர்நாடகா அரசு திரும்பப் பெற்றுக் கொண்டதாக தெரிவிக்கப்பட்டது. அதாவது கர்நாடகா உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியின் அனுமதியின்றி வாபஸ் பெற்றதால் உரிய அனுமதியுடன் புதிய வாபஸ் அறிக்கை வெளியிடப்பட இருக்கிறது.
விசாரணையின் முடிவில் சொத்துக் குவிப்பு வழக்கில் புதிய அரசு வழக்கறிஞரை கர்நாடகா அரசு நியமித்துக் கொள்ள அனுமதி அளித்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. மேலும் கர்நாடகா உயர்நீதிமன்றத்தின் ஆலோசனையுடன் அரசு வழக்கறிஞரை நியமித்துக் கொள்ளலாம் என்றும் உச்சநீதிமன்ற நீதிபதிகள் தெரிவித்தனர்.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications