புனே மருத்துவமனையில் குழந்தை திருட்டை தடுக்க வருகிறது இ-டேக் திட்டம்
புனே: அரசு மருத்துவமனைகளில் இருந்து பிறந்த குழந்தைகள் திருடுபோவதை தடுக்க ஒரு புதிய திட்டத்தை அறிமுகப்படுத்த புனே முனிசிபல் கார்பரேஷன் முடிவு செய்துள்ளது.
அரசு மருத்துவமனைகளில் இருந்து பிறந்த குழந்தைகள் திருடுபோவது அதிகரித்து வருகிறது. இதை தடுக்க புனே முனிசிபல் கார்பரேஷன் புதிய திட்டத்தை அறிமுகப்படுத்த உள்ளது. முதல்கட்டமாக இந்த திட்டம் கமலா நேரு மருத்துவமனையில் அறிமுகப்படுத்தப்படுகிறது.
பிரசவத்திற்காக பெண்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்படும்போது அவர்களின் விவரங்கள் பதிவு செய்யப்படும். தாயின் கைரேகை எலக்ட்ரானிக் மெஷினில் பதியப்படும். இதையடுத்து குழந்தை பிறந்த பிறகு அதன் கால் ரேகையும் எலக்ட்ரானிக் மெஷினில் பதிவு செய்யப்படும். மேலும் குழந்தையின் முழங்காலிலும், தாயின் கையிலும் எலக்ட்ரானிக் டேக் கட்டப்படும்.
இந்த டேக் மூலம் குழந்தையின் அசைவை கம்ப்யூட்டர் மூலம் கண்காணிக்க முடியும். குழந்தைகளை வைத்திருக்கும் அறையில் இருந்து யாராவது குழந்தையை தூக்கிச் சென்றால் சைரன் கத்தும். அதன் மூலம் ஊழியர்கள் வந்து குழந்தையை காப்பாற்ற முடியும். தாய் மற்றும் குழந்தையின் கையில் உள்ள டேக்கில் இருக்கும் கோடிங்கால் குழந்தை மாற வாய்ப்பில்லை.
ரூ.75 லட்சம் செலவில் அறிமுகப்படுத்தப்படும் இந்த திட்டம் எப்படி செயல்படுகிறது என்பதை பார்த்துவிட்டு பிற மருத்துவமனைகளிலும் அறிமுகப்படுத்த புனே முனிசிபல் கார்பரேஷன் முடிவு செய்துள்ளது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications