பாஜகவின் பிரதமர் வேட்பாளராக நரேந்திர மோடி அடுத்த வாரம் அறிவிக்கப்படுகிறார்?
டெல்லி: பாரதிய ஜனதா கட்சியின் பிரதமர் வேட்பாளராக குஜராத் முதல்வர் நரேந்திர மோடி அடுத்த வாரம் அறிவிக்கப்படக் கூடும் என்று டெல்லி செய்திகள் வெளியாகி உள்ளன.
வரும் நவம்பர் மாதம் மத்திய பிரதேசம், டெல்லி, ராஜஸ்தான், சத்தீஸ்கர், மிசோராம் ஆகிய 5 மாநிலங்களுக்கு சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இதுதான் லோக்சபா தேர்தலுக்கு முன்னோட்டமாக கருதப்படுகிறது.

இதனால் 5 மாநில சட்டசபை தேர்தலை ஒரு மினி லோக்சபா தேர்தலாக அனைத்து கட்சிகளும் எதிர்கொள்ள ஆயத்தமாகி வருகின்றன. பாரதிய ஜனதாவில் பெரும் சலசலப்புகளுக்கு இடையே லோக்சபா தேர்தல் பிரசாரக் குழுத் தலைவராக குஜராத் முதல்வர் நரேந்திர மோடி அறிவிக்கப்பட்டார்.
இதைத் தொடர்ந்து எந்த நேரத்திலும் பாரதிய ஜனதாவின் பிரதமர் வேட்பாளராக நரேந்திர மோடி அறிவிக்கப்படக் கூடும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் பாரதிய ஜனதாவின் மூத்த தலைவரான எல்.கே. அத்வானி போன்றோர் இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
இதனிடையே தாம் 2017ஆம் ஆண்டு வரை குஜராத் மக்களின் முதல்வராக பணியாற்றுவேன் என்று நரேந்திர மோடியும் கூறி பரபரப்பை ஏற்படுத்தியிருந்தார். இந்த நிலையில் ஆர்.எஸ்.எஸ், பாரதிய ஜனதா மூத்த தலைவர்களின் கூட்டம் டெல்லியில் நடைபெற்றது.
5 மாநில சட்டசபைகளுக்கான தேர்தல் தேதி அறிவிக்கப்பட இருக்கிற நிலையில் இறுதி முடிவெடுத்தாக வேண்டிய நிலைக்கு பாஜகவும் அதன் தாய் அமைப்பான ஆர்.எஸ்.எஸ்.-ம் தள்ளப்பட்டுள்ளன.
இதனால் நாளை டெல்லியில் மீண்டும் ஆர்.எஸ்.எஸ்.- பாரதிய ஜனதா தலைவர்களின் கூட்டம் நடைபெற இருக்கிறது. இந்தக் கூட்டத்தில் நரேந்திர மோடியை பிரதமர் வேட்பாளராக அறிவிப்பது தொடர்பான இறுதி முடிவெடுக்கப்படக் கூடும் எனத் தெரிகிறது.
-
பழைய பன்னீர்செல்வமா வாங்க.. அண்ணாமலையை விடாத அமித் ஷா! பாஜக அள்ளிக் கொடுக்கும் ரெண்டு லட்டு! என்ன? -
மோடியை சந்தித்த அண்ணாமலை! புது கட்சியா? பாஜகவில் புதிய பொறுப்பா? நாளை தெரிந்துவிடும் -
பாஜகவில் இருந்து விலகினாரா அண்ணாமலை? அப்படி எதுவும் தகவல் இல்லையே!முழு பூசணிக்காயை மறைத்த நயினார்! -
அண்ணாமலை தொடங்கும் புதிய கட்சி.. இணையும் பிரபல பிஸ்னஸ் மேன், திமுக மாஜி அமைச்சர்? அவங்களா? -
என் குழந்தையின் முக ஜாடையை தப்பா பேசுறாங்க! முக்தார், சூர்யா சிவா மீது அலிஷா அப்துல்லா புகார் -
அண்ணாமலையை பஞ்சராக்கிய பாஜக டபுள் இன்ஜின்.. 5 வருஷம் ஆட்டத்தின் அன்டோல்டு கதை -
பாஜக பருப்பு இனி வேகாது.. 6 வருஷத்துக்கு பின் அண்ணாமலைக்குத் தெரிந்த உண்மை! உடைத்த ஜோதிமணி எம்பி! -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
"வீட்டு வேலை செய்த பெண் டூ மாண்புமிகு அமைச்சர்.." மேற்கு வங்கத்தில் பாஜக செய்த சம்பவம்! -
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
ஆடி மாதம் முடிந்ததும் அதிரடி! செப்டம்பரில் புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கசியும் ரகசிய பிளான் -
ரஜினியின் ஆசி கிடைக்குமா! சிஸ்டத்தை மாற்றும் ‘ஆன்மீக அரசியல்’ முழக்கத்தை கையில் எடுக்கும் அண்ணாமலை?












Click it and Unblock the Notifications