அமெரிக்காவில் 2 இந்தியர்கள் சுட்டுக் கொலை

Subscribe to Oneindia Tamil

வாஷிங்டன்: அமெரிக்காவின் வடக்கு இண்டியானா நகரில் பல்பொருள் அங்காடிக்கு சென்ற 2 இந்தியர்கள் மர்மநபர்களால் சுட்டுக்கொல்லப்பட்டனர். தப்பி ஓடிய மர்மநபர்களை போலீஸார் தேடி வருகின்றனர்.

கொலையான இருவரின் பெயர் ஜந்தர் பாட்சா (55 வயது), பவன் சிங் (22) என்பதாகும். அமெரிக்காவின் வடக்கு இன்டியானா நகரில் உள்ள சூப்பர் மார்கெட்டிற்கு இவர்கள் இருவரும் தங்களுக்கு வேண்டிய பொருட்களை வாங்கச் சென்றனர். அப்போது, முகமூடி அணிந்து வந்த இரண்டு மர்ம நபர்களிர் ஒருவன் இவர்கள் இருவரையும் துப்பாக்கியால் சுட்டுவிட்டு ஓடிவிட்டார்.

துப்பாக்கி குண்டுகளால் துளைக்கப்பட்ட இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். தகவல் அறிந்ததும் சம்பவ இடத்திற்கு வந்த நகர காவல்துறையினர் கொலையானவர்களின் உடல்களை மீட்டு, ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

தப்பியோடிய மர்ம நபரை தீவிரமாக தேடிய போலீசார் ஒருவனை கைது செய்துள்ளனர். அவனது பெயர் கெவின்மூர் என்பது போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.

அமெரிக்காவில் சீக்கிய சமயத்தைச் சேர்ந்த இருவர் சுட்டுக் கொல்லப்பட்டதற்கு வடக்கு அமெரிக்க பாஞ்சாபி அசோசியேசன் கண்டனம் தெரிவித்துள்ளது. சீக்கியர்களுக்கு பாதுகாப்பு வழங்கவேண்டும் என்றும் அமெரிக்க அரசை வலியுறுத்தியுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+