தமிழகத்தில் 30 ஐபிஎஸ் அதிகாரிகள் அதிரடி மாற்றம்...17 பேருக்கு பதவி உயர்வு
சென்னை; தமிழகத்தில் ஒரே நாளில் 30 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இதில் 17 ஐபிஎஸ் அதிகாரிகளுக்கு பதவி உயர் அளிக்கப்பட்டுள்ளது. சென்னை போக்குவரத்து காவல் கூடுதல் ஆணையர் பதவிக்கும் அதிகாரி நியமிக்கப்பட்டுள்ளார்.
ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றத்திற்கான உத்தரவை உள்துறைச் செயலர் எஸ்.கே.பிரபாகர் பிறப்பித்துள்ளார். ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றமும், பழைய பதவியும் வருமாறு.

1. சென்னை லஞ்ச ஒழிப்புத்துறை சைபர் அரங்கம் எஸ்.பி, ரம்யா பாரதி டிஐஜியாக பதவி உயர்வு அளிக்கப்பட்டு சென்னை வடக்கு மண்டல சட்டம்-ஒழுங்கு இணை ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார்.
2. சிலை கடத்தல் தடுப்பு பிரிவு எஸ்.பி, பொன்னி டிஐஜியாக பதவி உயர்வு அளிக்கப்பட்டு மதுரை சரக டிஐஜியாக நியமிக்கப்பட்டுள்ளார்.
3. டெல்லிக்கு அயல் பணியில் சிபிஐ எஸ்.பியாக பணியாற்றும் சோனல் சந்திரா டிஐஜியாக பதவி உயர்த்தப்பட்டு அதே பணியை தொடர்கிறார்.
4. தஞ்சை சரக டிஐஜி பிரவேஷ்குமார் இடமாற்றம் செய்யப்பட்டு திருநெல்வேலி சரக டிஐஜி ஆக நியமிக்கப்பட்டுள்ளார்.
5. திருநெல்வேலி சரக டிஐஜி பிரவீன்குமார் அபிநபு இடமாற்றம் செய்யப்பட்டு சேலம் சரக டிஐஜியாக நியமிக்கப்பட்டுள்ளார்.
6. சென்னை சிபிசிஐடி டிஐஜி ரூபேஷ்குமார் மீனா இடமாற்றம் செய்யப்பட்டு திண்டுக்கல் சரக டிஐஜியாக நியமிக்கப்பட்டுள்ளார்.
7. சென்னை நிர்வாகப் பிரிவு டிஐஜி ஆன்னி விஜயா இடமாற்றம் செய்யப்பட்டு வேலூர் சரக டிஐஜியாக நியமிக்கப்பட்டுள்ளார்.
8. காவலர் பயிற்சி டிஐஜி கயல்விழி இடமாற்றம் செய்யப்பட்டு தஞ்சாவூர் சரக டிஐஜி ஆக நியமிக்கப்பட்டுள்ளார்.
9. அயல் பணியில் பாங்காக்கில் இந்திய தூதரக டிஐஜியாக (கவுன்சலர்) பணியாற்றும் செந்தில்வேலன் ஐஜியாக பதவி உயர்த்தப்பட்டு அதே பணியில் தொடர்கிறார்.

10. அயல் பணியில் நாக்பூரில் ஐ.பி துணை இயக்குநராக பணியாற்றும் அவினாஷ் குமார் டிஐஜியிலிருந்து ஐஜியாக பதவி உயர்த்தப்பட்டு அதே பொறுப்பில் தொடர்கிறார்.
11. அயல் பணியில் டெல்லியில், சிபிஐயில் டிஐஜியாக பணிபுரியும் அஸ்ரா கார்க் ஐஜியாக பதவி உயர்த்தப்பட்டு அதே பணியில் தொடர்கிறார்.
12. வேலூர் சரக டிஐஜி ஏ.ஜி.பாபு ஐஜியாக பதவி உயர்த்தப்பட்டு திருப்பூர் நகர காவல் ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார்.
13. சென்னை ஆயுதப்படை டிஐஜி எஜிலியரசனே ஐஜியாக பதவி உயர்த்தப்பட்டு அதே பொறுப்பில் தொடர்கிறார்.
14. சென்னை செயலாக்க பிரிவு டிஐஜி செந்தில்குமாரி ஐஜியாக பதவி உயர்த்தப்பட்டு சீருடை பணியாளர் தேர்வாணைய ஐஜியாக (உறுப்பினர் செயலர்) நியமிக்கப்பட்டுள்ளார்.
15. சென்னை வடக்கு மண்டல இணை ஆணையர் துரைகுமார் டிஐஜி பொறுப்பிலிருந்து ஐஜியாக பதவி உயர்த்தப்பட்டு திருநெல்வேலி மாநகர காவல்துறை ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார்.
16. சேலம் சரக டிஐஜி மகேஸ்வரி ஐஜியாக பதவி உயர்த்தப்பட்டு சென்னை தொழில்நுட்ப பிரிவு ஐஜியாக நியமிக்கப்பட்டுள்ளார்.
17. உளவுத்துறை டிஐஜி ஆசியம்மாள் ஐஜியாக பதவி உயர்த்தப்பட்டு அதே பொறுப்பில் ஐஜியாக தொடர்கிறார்.
18. தொழில்நுட்ப பிரிவு டிஐஜி மல்லிகா ஐஜியாக பதவி உயர்த்தப்பட்டு சென்னை காவலர் நலன் ஐஜியாக நியமிக்கப்பட்டுள்ளார்.
19. சென்னை போக்குவரத்து காவல் வடக்கு இணை ஆணையர் லலிதா லட்சுமி டிஐஜியிலிருந்து ஐஜியாக பதவி உயர்த்தப்பட்டு சென்னை லஞ்ச ஒழிப்புத்துறை ஐஜி ஆக நியமிக்கப்பட்டுள்ளார்.
20. திண்டுக்கல் சரக டிஐஜி விஜயகுமாரி ஐஜியாக பதவி உயர்த்தப்பட்டு சென்னை அமலாக்கப்பிரிவு ஐஜியாக நியமிக்கப்பட்டுள்ளார்.

21. சென்னை ரயில்வே போலீஸ் டிஐஜி ஜெயகௌரி ஐஜியாக பதவி உயர்த்தப்பட்டு சிபிசிஐடி சிறப்பு புலனாய்வு பிரிவு ஐஜியாக நியமிக்கப்பட்டுள்ளார்.
22. மதுரை சரக டிஐஜி காமினி ஐஜியாக பதவி உயர்த்தப்பட்டு சென்னை குற்றப்பிரிவு ஐஜியாக நியமிக்கப்பட்டுள்ளார்.
23. சென்னை அமலாக்கப்பிரிவு ஐஜி கபில் குமார் சரத்கர் இடமாற்றம் செய்யப்பட்டு சென்னை போக்குவரத்து காவல் கூடுதல் ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார்.
24. திருநெல்வேலி நகர காவல் ஆணையர் செந்தாமரைக்கண்ணன் இடமாற்றம் செய்யப்பட்டு சமூக நலன் மற்றும் மனித உரிமை பிரிவு ஐஜி ஆக நியமிக்கப்பட்டுள்ளார்.
25. திருப்பூர் நகர காவல் ஆணையர் வனிதா பணியிட மாற்றம் செய்யப்பட்டு சென்னை ஊர்க்காவல் படை ஐஜியாக நியமிக்கப்பட்டுள்ளார்.
26. சென்னை சீருடை பணியாளர் தேர்வாணைய ஐஜி மகேந்திர குமார் ரதோட் இடமாற்றம் செய்யப்பட்டு மாநில மனித உரிமை ஆணைய புலனாய்வு பிரிவு ஐஜியாக நியமிக்கப்பட்டுள்ளார்.
27. மாநில மனித உரிமை ஆணைய எஸ்.பி, சாந்தி இடமாற்றம் செய்யப்பட்டு சென்னை டிஜிபி அலுவலக நிர்வாக பிரிவு ஏஐஜி ஆக நியமிக்கப்பட்டுள்ளார்.
28. பீகாரில் இருந்து தமிழக கேடராக அயல் பணியில் வந்துள்ள எஸ்பி அபினவ் குமார் சென்னை டிஜிபி அலுவலகம் விரிவாக்கப்பிரிவு ஏஐஜியாக நியமிக்கப்பட்டுள்ளார்.
29. சென்னை விரிவாக்கப் பிரிவு ஏஐஜி வேதரத்தினம் இடமாற்றம் செய்யப்பட்டு லஞ்ச ஒழிப்புத்துறை சைபர் அரங்கம் எஸ்.பியாக நியமிக்கப்பட்டுள்ளார்.
30. சென்னை டிஐஜி (பொதுப்பிரிவு) ராதிகா ஐஜியாக பதவி உயர்த்தப்பட்டு அதே பொறுப்பில் ஐஜியாக தொடர்கிறார்.
இவ்வாறு உள்துறை செயலர் எஸ் கே பிரபாகர் பிறப்பித்துள்ள உத்தரவில் கூறப்பட்டுள்ளது.
-
நகைக்கடன் வாங்கினீங்களா? ஏப்ரல் 1க்கு பின் தங்கம் வைத்து loan எடுக்க முடியாதா? புது ரூல்ஸ் அதிர்ச்சி -
திமுகவின் இளம் வேட்பாளர்.. அவினாசி தொகுதியில் 26 வயது மருத்துவருக்கு வாய்ப்பு கொடுத்த ஸ்டாலின்! -
காங்கிரஸில் இணைந்தார் ஜி.கே.எம். தமிழ்க்குமரன்! பென்னாகரம் தொகுதியை குறி வைக்கும் ஜி.கே.மணி மகன்! -
வைத்திலிங்கம் வயிற்றில் பாலை வார்த்த ஸ்டாலின்! திமுகவுக்கு ஜம்ப்பான 5 பேருக்கு சீட்! யார் அவர்கள்? -
பிடிஆர் பழனிவேல் தியாகராஜனின் தொகுதி! திமுகவின் கோட்டை மதுரை மத்தியில் சுந்தர்.சி போட்டி! யார் இவர்? -
தமிழ் புத்தாண்டு பலன்: எச்சரிக்கையாக இருக்க வேண்டிய 3 ராசிகள்.. உங்க ராசி இருக்கா பாருங்க -
விஜய் வேட்பாளர்களை அறிமுகம் செய்யும் நேரம், திரிஷா வெளியிட்ட பதிவு.. இப்படி பண்றீங்களேம்மா? -
போடியில் ஓபிஎஸ்! ஆலங்குளத்தில் மனோஜ் பாண்டியன்! திமுக வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு -
164.. முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின்.. திமுக பட்டியலில் கடைசி பெயராக வந்த முதல்வர் பெயர் -
சட்டமன்ற தேர்தலில் நடிகர் சுந்தர் சி போட்டி.. மதுரை மத்திய தொகுதியில் களம் இறங்குகிறார்.. ஏசி சண்முகம் அறிவிப்பு -
எழும்பூர் டூ பத்மநாபபுரம் வரை.. திமுகவில் சீட் மறுக்கப்பட்ட சிட்டிங் எம்எல்ஏக்கள்! முழு விவரம் -
அண்ணாமலையை தொட்ட விஜய்! கொங்குவில் ரகசிய வார் ரூம் டீல்? எடப்பாடி பழனிசாமிக்கு காத்திருக்கும் ஷாக்












Click it and Unblock the Notifications