2 அபார்ஷன்.. மிட்நைட்டில்.. சுடுகாட்டில் கதறிய குரல்.. கீழே கிடந்த லுங்கி.. பதறிப்போன கள்ளக்குறிச்சி

மனைவி இறந்த துக்கத்தில் கணவனும் தற்கொலை செய்து கொண்டார்

Subscribe to Oneindia Tamil

கள்ளக்குறிச்சி: மனைவி இறந்த துக்கத்தில், நடுராத்திரி சுடுகாட்டுக்கு ஓடி சென்றுள்ளார் கணவர்.. அங்கே போனதில் இருந்தே அழுது கொண்டிருந்துள்ளார்.. அதற்கு பிறகு தான் அந்த விபரீதம் நடந்துள்ளது.

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே உள்ளது குணமங்கலம் என்ற கிராமம்.. இங்கு வசித்து வந்தவர் ஹரிகோவிந்தன்.. 27 வயதாகிறது.. இவர் ஒரு கூலி தொழிலாளி.

இவரது மனைவி பெயர் கீர்த்திகா.. கும்பகோணத்தைச் சேர்ந்தவர்.. 24 வயதுதான் ஆகிறது.. 6 மாதங்களுக்கு முன்பு இவர்களின் திருமணம் நடந்தது.. பெற்றோர்கள் பார்த்து நடத்தி வைத்த இந்த திருமணத்தில் மணமக்கள் இருவருமே தங்கள் வாழ்க்கையை மகிழ்ச்சியுடன் துவக்கினர்.

 தம்பதி

தம்பதி

இந்நிலையில், திருமணத்துக்கு பிறகு அடுத்தடுத்து மூன்று மாதம் கீர்த்திகாவுக்கு அபார்ஷன் ஏற்பட்டுள்ளது.. 2 முறையுமே அபார்ஷன் உடனுக்குடன் ஏற்பட்டதால், மனமுடைந்த கீர்த்திகா கடந்த மாதம் தற்கொலை செய்து கொண்டார்... இதனால் மனைவி இறந்த துக்கத்தில் இருந்து மீள முடியாமல் ஹரிகோவிந்தன் தவித்து வந்தார்.. அவரை யாராலுமே சமாதானம் செய்ய முடியவில்லை.. கீர்த்திகா இல்லாமல் என்னால் நிம்மதியாக வாழ முடியவில்லையே என்று நண்பர்களிடம் புலம்பி கொண்டே இருந்திருக்கிறார்..

 சுடுகாடு

சுடுகாடு

வீட்டிலும், நண்பர்களிடமும் எந்நேரமும் கண்கலங்கி பேசி கொண்டே இருந்துள்ளார்.. இதனிடையே, கடந்த வாரம் ஒருநாள் திடீரென நடுராத்திரி கிளம்பி சுடுகாட்டுக்கு சென்றார்.. சுடுகாட்டில் கீர்த்திகா உடலை அடக்கம் செய்யப்பட்ட இடத்தில் வந்து ஹரிகோவிந்தன் நின்று கொண்டு அங்கேயே கதறி கதறி அழுதுள்ளார்.. அந்த சத்தம் கேட்டு நண்பர்கள் பதறி அடித்து சென்றுள்ளனர்.. கீர்த்திகாவின் ஆவி வந்து தன்னுடைய உடலில் ஏறி கொண்டுவிட்டது, அதனால் நான் கீர்த்திகாவிடமே போக போகிறன் என்று அழுதுள்ளார் ஹரிகோவிந்தன்.. கீர்த்திகாவின் குரலேயே அழுதாராம்..

 கண்ணீர்

கண்ணீர்

இதைபார்த்த அவரது நண்பர்கள் அவருக்கு ஆறுதல் கூறி சுடுகாட்டில் இருந்து வீட்டிற்கு சென்றுள்ளனர்.. சுடுகாட்டுக்கு வந்து போனதில் இருந்து இன்னும் நிலைமை மோசமாகி உள்ளது.. சாப்பாடும் ஒழுங்காக சாப்பிடாமல், கீர்த்தனாவிடம் போக போகிறேன் என்று சொல்லி கொண்டே இருந்துள்ளார். இந்நிலையில், நேற்றிரவு ஹரிகோவிந்தன் வீட்டிற்கு வரவேயில்லை.. போன் அடித்தாலும், ரிங் போய் கொண்டே இருந்திருக்கிறது, யாரும் எடுக்கவில்லை..

 லுங்கி

லுங்கி

நைட் 11 மணிக்கு மேலாகியும் வீட்டிற்கு வராததால், குடும்பத்தினரும், நண்பர்களும் ஆளுக்கு ஒரு பக்கம் தேடி அலைந்தனர்.. அப்போதுதான், வீட்டுக்கு பக்கத்திலேயே இருந்த ஒரு கிணற்றடியில் ஹரிகோவிந்தனின் லுங்கி கிடந்துள்ளது... பிறகு அங்கேயே செல்போனும் கிடந்துள்ளது... இதனால் சந்தேகமடைந்த உறவினர்கள் உடனடியாக உளுந்தூர்பேட்டை தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தந்தனர்.. அவர்கள் விரைந்து கிணற்றினுள் தேடி பார்த்தபோது, ஹரிகோவிந்தன் சடலமாக கிடந்ததை கண்டுபிடித்தனர்...

 டைரி

டைரி

இதையடுத்து சடலத்தை கைப்பற்றிய போலீசார் போஸ்ட் மார்ட்டம் செய்ய அனுப்பி வைத்து, விசாரணையை ஆரம்பித்தனர்.. அப்போதுதான், ஹரிகோவிந்தன் எழுதிய டைரி ஒன்று கிடைத்துள்ளது.. அந்த டைரியில் என்ன இருக்கிறது என்று தெரியவில்லை.. போலீசார் விசாரித்து கொண்டிருக்கிறார்கள்.. 6 மாதத்தில் 2 முறை அபார்ஷன் ஆனதால், மனைவி தற்கொலை செய்து கொண்டதும், அதையொட்டி கணவன் தற்கொலை செய்து கொண்டதும், அந்த கிராமத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+