பொருளாதார வழித்தடம், முதலீடு.. மோடி பயணத்தில் ஐக்கிய அரபு அமீரகத்துடன் கையெழுத்தான 10 ஒப்பந்தங்கள்!
அபுதாபி: பிரதமர் மோடியின் ஐக்கிய அரபு அமீரக பயணத்தின் போது பொருளாதார வழித்தட கட்டமைப்பு, முதலீடு உள்ளிட்ட பல்வேறு துறைகளில் 10 முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.
பிரதமர் நரேந்திர மோடி 7-வது முறையாக ஐக்கிய அரபு அமீரகத்துக்கு பயணம் மேற்கொண்டுள்ளார். அபுதாபி விமான நிலையத்தில் பிரதமர் மோடியை ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அதிபர் ஷேக் முகமது பின் சயீத் அல் நஹ்யான் ஆரத் தழுவி வரவேற்றார்.

பின்னர் பிரதமர் மோடி, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அதிபர் ஷேக் முகமது பின் சயீத் அல் நஹ்யான் ஆகியோர் தனியே மற்றும் பிரதிநிதிகள் நிலையிலான பேச்சுகளில் ஈடுபட்டனர். இருதரப்பு ஒத்துழைப்பை ஆய்வு செய்த அவர்கள், ஒத்துழைப்புக்கான புதிய பகுதிகள் குறித்து விவாதித்தனர். வர்த்தகம், முதலீடு, டிஜிட்டல் கட்டமைப்பு, நிதிசார் தொழில்நுட்பம், எரிசக்தி, கட்டமைப்பு, கலாச்சாரம், இருநாட்டு மக்களுக்கு இடையேயான உறவுகள் உள்ளிட்ட துறைகளில் விரிவான உத்திசார் கூட்டாண்மையை வலுப்படுத்துவதை அவர்கள் வரவேற்றனர். அத்துடன் பிராந்திய, சர்வதேச விவகாரங்கள் குறித்தும் அவர்கள் விவாதித்தனர். பின்னர் இரு தலைவர்களும் பல்வேறு துறைசார் ஒப்பந்தங்களை பரிமாறி கொண்டனர்.
மேலும் டெல்லி ஐஐடி-அபுதாபி வளாகத்தின் முதலாவது பிரிவு மாணவர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி கலந்துரையாடினார். அப்போது இந்தியா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் இடையேயான இருதரப்பு ஒத்துழைப்பில் புதிய அத்தியாயத்தைத் தொடங்குவது மட்டுமின்றி, இரு நாடுகளைச் சேர்ந்த இளைஞர்களையும் ஒன்றிணைக்கிறது என்று பிரதமர் மோடி
கூறினார். டெல்லி இந்திய தொழில்நுட்பக் கழகம் (ஐ.ஐ.டி-டி), அபுதாபி கல்வி, அறிவுசார்த் துறை (ஏ.டி.இ.கே) ஆகியவற்றுக்கு இடையேயான கூட்டு ஒத்துழைப்புடன் இந்த திட்டம், உலகளவில் மாணவர்களுக்கு தரமான உயர் கல்வி வாய்ப்புகளை வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது என்றும் பிரதமர் மோடி குறிப்பிட்டார்.
பிரதமர் மோடியின் இந்த பயணத்தின் போது கையெழுத்தான ஒப்பந்தங்கள்: இருதரப்பு முதலீட்டு ஒப்பந்தம்- இரு நாடுகளிலும் முதலீடுகளை மேலும் ஊக்குவிப்பதற்கான முக்கிய உதவியாக இருக்கும். ஐக்கிய அரபு எமிரேட்ஸுடன் இருதரப்பு முதலீட்டு ஒப்பந்தம், விரிவான பொருளாதார கூட்டு ஒப்பந்தம் ஆகிய இரண்டிலும் இந்தியா கையெழுத்திட்டுள்ளது.
மின்சார இணைப்பு மற்றும் வர்த்தகத் துறையில் ஒத்துழைப்புக்கான புரிந்துணர்வு ஒப்பந்தம்: இது எரிசக்தி பாதுகாப்பு, எரிசக்தி வர்த்தகம் உட்பட எரிசக்தித் துறையில் ஒத்துழைப்புக்கான புதிய பகுதிகளுக்கு வழிகாண்கிறது.
இந்தியா-மத்திய கிழக்கு பொருளாதார வழித்தடம் குறித்து இந்தியா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அரசுகளுக்கு இடையிலான கட்டமைப்பு ஒப்பந்தம்: முந்தைய புரிந்துணர்வு, ஒத்துழைப்பை உருவாக்கி, பிராந்திய இணைப்பை மேம்படுத்துவதற்காக இந்தியா, ஐக்கிய அரபு எமிரேட்ஸின் ஒத்துழைப்பை வளர்த்தல்.
டிஜிட்டல் உள்கட்டமைப்பு திட்டங்களில் ஒத்துழைப்புக்கான புரிந்துணர்வு ஒப்பந்தம்: இது டிஜிட்டல் உள்கட்டமைப்பு துறையில் முதலீட்டு ஒத்துழைப்பு உட்பட பரந்த அளவிலான ஒத்துழைப்புக்கான கட்டமைப்பை உருவாக்குவதுடன், தொழில்நுட்ப அறிவு, திறன்கள், நிபுணத்துவத்தை பகிர்ந்து கொள்ளவும் உதவும்.
இரு நாடுகளின் தேசிய ஆவணக் காப்பகங்களுக்கு இடையே ஒத்துழைப்பு நெறிமுறை: ஆவணக் காப்பகப் பொருட்களை மீட்டெடுத்தல், பாதுகாத்தல் உள்ளிட்ட இந்தத் துறையில் விரிவான இருதரப்பு ஒத்துழைப்பை இந்த நெறிமுறை வடிவமைக்கும்.
பாரம்பரியம், அருங்காட்சியகங்கள் துறையில் ஒத்துழைப்புக்கான புரிந்துணர்வு ஒப்பந்தம்: குஜராத்தின் லோதலில் உள்ள கடல்சார் பாரம்பரிய வளாகத்தை ஆதரிப்பதை நோக்கமாகக் கொண்ட இரு நாடுகளுக்கும் இடையிலான ஈடுபாட்டை இது ஊக்குவிக்கும்.
உடனடி பணப் பரிவர்த்தனை தளங்களான யுபிஐ (இந்தியா), எஎஎன்ஐ (யுஎஇ) ஆகியவற்றை இணைப்பதற்கான ஒப்பந்தம்: இது இரு நாடுகளுக்கும் இடையே தடையற்ற எல்லை தாண்டிய பரிவர்த்தனைகளுக்கு வழிவகுக்கும். கடந்த ஆண்டு ஜூலை மாதம் பிரதமரின் அபுதாபி பயணத்தின் போது கையெழுத்திடப்பட்ட பணம் பரிவர்த்தனை, செய்தி அனுப்பும் முறைகளை ஒன்றிணைப்பதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தைத் தொடர்ந்து இது கையெழுத்திடப்பட்டது.
உள்நாட்டு பற்று/ கடன் அட்டைகளை ஜெய்வான் (ஐக்கிய அரபு எமிரேட்ஸ்) உடன் ரூபே (இந்தியா) அட்டையை இணைப்பதற்கான ஒப்பந்தம்: நிதித் துறை ஒத்துழைப்பை உருவாக்குவதில் முக்கியமான நடவடிக்கையான இது, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் முழுவதும் ரூபே பயன்பாட்டை ஏற்பதை அதிகரிக்கும்.
ஐக்கிய அரபு எமிரேட்ஸின் உள்நாட்டு அட்டை ஜெய்வான் அறிமுகம் செய்யப்பட்டதற்காக அதிபர் ஷேக் முகமது பின் சயீத் அல் நஹ்யானுக்கு பிரதமர் வாழ்த்து தெரிவித்தார். ஜெய்வான் அட்டையைப் பயன்படுத்தி மேற்கொள்ளப்பட்ட பரிவர்த்தனையை தலைவர்கள் பார்வையிட்டனர்.
எரிசக்தி ஒத்துழைப்பை வலுப்படுத்துவது குறித்தும் தலைவர்கள் விவாதித்தனர். ஐக்கிய அரபு எமிரேட்ஸ் கச்சா எண்ணெய், சமையல் எரிவாயுவின் மிகப்பெரிய ஆதாரங்களில் ஒன்றாக இருப்பதுடன் திரவ இயற்கை எரிவாயுவுக்கான நீண்டகால ஒப்பந்தங்களில் இந்தியா தற்போது ஈடுபடுவதை அவர்கள் பாராட்டினர்.
இப்பயணத்தையொட்டி ரைட்ஸ் லிமிடெட் அபுதாபி துறைமுக நிறுவனத்துடனும், குஜராத் கடல்சார் வாரியம் அபுதாபி துறைமுக நிறுவனத்துடனும் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன. இது துறைமுக உள்கட்டமைப்பை உருவாக்கவும், இரு நாடுகளுக்கும் இடையேயான தொடர்பை மேலும் மேம்படுத்தவும் உதவும்.
அபுதாபியில் பிஏபிஎஸ் (போச்சாசன் வாசி அக்சர் புருஷோத்தம் ஸ்வாமி நாராயண் கோயில்) கட்டுவதற்கு நிலம் வழங்கியதற்காகவும், தனிப்பட்ட முறையில் ஆதரவு அளித்ததற்காகவும் அதிபர் ஷேக் முகமது பின் சயீத் அல் நஹ்யானுக்கு பிரதமர் நன்றி தெரிவித்தார். பிஏபிஎஸ் கோயில் ஐக்கிய அரபு எமிரேட்ஸ்-இந்தியா நட்பின் கொண்டாட்டம், ஆழமான வேரூன்றிய கலாச்சார பிணைப்புகள், நல்லிணக்கம், சகிப்புத்தன்மை, இரு தரப்பு அமைதிக்கான ஐக்கிய அரபு எமிரேட்ஸின் உலகளாவிய உறுதிப்பாட்டின் உருவகம் என்று இருதரப்பும் குறிப்பிட்டன.
-
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்?












Click it and Unblock the Notifications