அபுதாபி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

பிறந்தவுடன் மருத்துவரின் மாஸ்கை பறித்த குழந்தை.. நம்பிக்கையின் அடையாளம் என கொண்டாடும் நெட்டிசன்கள்

Google Oneindia Tamil News

அபுதாபி: கொரோனா வைரஸ் பரவி வரும் நிலையில் பிறந்த குழந்தை ஒன்று மருத்துவரின் முகக் கவசத்தை கழற்றும் புகைப்படம் வைரலாகி வருகிறது.

இந்தியாவில் கொரோனா வைரஸால் 73 லட்சம் பேர் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளார்கள், இதுவரை 1.12 லட்சம் பேர் பலியாகிவிட்டனர்.

2020 ஆம் ஆண்டை கொரோனா பெருந்தொற்று உலக அளவில் புரட்டி போட்ட நிலையில் அதன் விளைவால் அமலில் உள்ள கட்டுப்பாடுகள், கெடுபிடிகள் போன்றவை கடைப்பிடிக்கப்படுகின்றன.

கொரோனா வைரஸ் பாதிப்பு

கொரோனா வைரஸ் பாதிப்பு

இதனால் கொரோனா வைரஸ் பாதிப்பு எப்போது நீங்குமோ என பொதுமக்கள் எதிர்பார்த்து காத்துக் கிடக்கிறார்கள். இத்தனை கெடுபிடிகளுக்கு மத்தியில் துபாயில் ஒரு மருத்துவமனையில் பிறந்த குழந்தை ஒன்று மருத்துவரின் முகக் கவசத்தை கழற்றும் காட்சிகள் வைரலாகி வருகின்றன.

இயல்பு நிலை

இயல்பு நிலை

இந்த புகைப்படத்தை பார்க்கும் இந்த உலகம் விரைவில் இயல்பு நிலைக்கு திரும்பும் என்பதை காட்டுகிறது. கொரோனா விரைவில் நீங்கி உலகில் அமைதி நிலவும் என்பதை இந்த புது வரவு உணர்த்துவதாக நம்பப்படுகிறது. மேலும் இக்குழந்தை நம்பிக்கையின் அடையாளமாக கருதப்படுகிறது.

முகக் கவசம்

முகக் கவசம்

எதிர்காலத்தில் இந்த முகக் கவசம் இல்லாத வாழ்க்கையை நாம் வாழ்வோம் என்பதை உணர்த்துவதாகவே இது இருப்பதாக நெட்டிசன்கள் பூரிப்படைகிறார்கள். எனினும் இந்த புகைப்படம் எப்போது எடுக்கப்பட்டது என்பது தெரியவில்லை.

மருத்துவர்

மருத்துவர்

அந்த புகைப்படத்தில் இடம்பெற்றுள்ள மருத்துவர் சமீர் சியெய்ப் ஐக்கிய அரபு எமிரேட்ஸை சேர்ந்தவர் என்பதும் இந்த குழந்தையின் படத்தை அவரே தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டிருந்தது தெரியவந்தது. அவர் விரைவில் நாம் எல்லோரும் முகக் கவசத்தை கழற்ற போகிறோம் என்பதன் அறிகுறியே இந்த குழந்தையின் செயல் என குறிப்பிட்டுள்ளார்.

English summary
A picture that goes viral that a new born baby removes mask of a doctor in Dubai that says Corona will clear soon.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X